இடுகைகள்

அனுஷ்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதாபாத்திரத்தை எந்தளவு உள்வாங்கி நடிக்கமுடியுமோ அந்தளவு நடித்திருக்கிறேன்! - பூமி பட்னாகர்

படம்
            பூமி பட்னாகர்       பூமி பட்னாகர் ஒவ்வொரு நடிகையும் முழுப்படத்தையும் தன் தோளில் தாங்க ஆசைப்படுவார்கள் . உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது . எப்படி உணர்கிறீர்கள் . அதுவும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிற படமாக உள்ளதே ? சில மாதங்களுக்கு முன்னர் எதற்கென்றே தெரியாமல் மனச்சோர்வு அடைந்திருந்தேன் . ஆனால் இனிமேல் அப்படி சூழல் இருக்காது . துர்காமதி படத்தை 190 நாடுகளில் சப்டைட்டிலோடு பார்க்க முடியும் . இப்போதுள்ள நிலையில் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியும் . இது சரியான முடிவுதான் என்று நினைக்கிறேன் .    இதன் மூலப்படத்தில் நடித்த அனுஷ்காவோடு் உங்களை ஒப்பிடுவார்கள் . இது உங்களுக்கு பதற்றமாக உள்ளதா ? அப்படியெல்லாம் இல்லை . நான் பாத்திரத்தை எந்தளவு முடியுமோ அந்தளவு உள்வாங்கி நடித்திருக்கிறேன் . இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு முயன்று இருக்கிறேன் . கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுத்துள்ளேன் என்று கூறுவேன் . பெரும்பாலான திகில் படங்களில் பாதிக்கப்பட்டவராக பெண்களே இருக்கிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அனைத்து கதைகளிலும் பெண்கள் ம

சூப்பர் ஜீரோ ஹீரோவான கதை!

படம்
studioflicks ஜீரோ ஆனந்த் எல் ராய் மனு ஆனந்த் அஜய் - அதுல் தனிஷ்க் பக்ஷி Steemit சூப்பர் ஜீரோவாக இருப்பவர் எப்படி பலருக்கும் இன்ஸ்பிரேஷன் மனிதராக மாறுகிறார், சூழல்கள் எப்படி அவரை மாற்றுகின்றன என்பதுதான் ஜீரோவின் கதை. மீரட்டில் வாழும்  ஜெகஜால குள்ள மனிதர். தன் அப்பாவின் தவறினால் மரபணு பிரச்னை ஏற்பட்டுவிட்டது என புகார் சொல்லி அப்பாவிடம் அடிவாங்குவதில் தொடங்குகிறது ஷாருக்கானின் நடிப்பு. சூப்பர் ஸ்டார் அண்டர்வேரோடு தெருவில் ஓடுவதை நினைத்துப் பாருங்கள். அசரவேயில்லை. அப்படியே ஷாருக்கான் செய்கிறார். அவருக்கு உயரம் கூட பிரச்னையில்லை. தனக்கு காதலி தேவை, குறிப்பாக மனைவி என தேடுதலில் இருக்கும்போது வானியலாளர் ஆஃபியா பிந்தரை சந்திக்கிறார். செரிபெரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை நடனம், இயல்பான பேச்சு என பேசி படுக்கை வரை வந்துவிடுகிறார். ஆனால் அப்போது பபிதா குமாரி மீதான காதல் தலைதூக்க, கல்யாணத்தைக் கூட தூக்கிப்போட்டுவிட்டு  பபிதாகுமாரியிடம் வந்துவிடுகிறார். அவர், தன் காதலனை இழந்த கோபதாபத்தில் இருக்கிறார். இருவரும் உண்மையான அன்பு என்றால் என்ன என விவாதம் நடத்துகின்றனர்.