இடுகைகள்

உடல் அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவப்புக்கண் மரத்தவளை - எதிரிகளிடமிருந்து தப்பிக்க உதவும் உடல் அமைப்பு

படம்
  சிவப்புக்கண் மரத்தவளை  இத்தவளையின் உடலிலுள்ள பச்சை நிறம், பச்சை இலைகளுக்கு இடையில் மறைந்து கொள்ள உதவுகிறது.  அறிவியல் பெயர்: அகல்ச்னிஸ் கால்டிரியாஸ் (Agalchnis callidryas) குடும்பம்: ஹைலிடே(Hylidae) குழு பெயர்: ஆர்மி (Army) இனம்: அ. கால்டிரியாஸ் (A. callidryas) அளவு: 7 செ.மீ.  காணப்படும் இடம் : மத்திய அமெரிக்கா  சிறப்பு அம்சம்: இரவு வேட்டையாடிகள். பச்சை நிற உடல், ஆரஞ்சு நிற கால், சிவப்பு நிற கண்கள். இதன் சிவப்பு நிற கண்களில் தலா மூன்று கண் இமைகள் உள்ளன. உடலின் பக்கவாட்டில் மஞ்சள், நீலநிற பட்டைகள் உள்ளன. பளீரிடும் நிறங்கள் எதிரிகளிடமிருந்து உயிர்பிழைக்க உதவுகின்றன. காடு, சதுப்புநிலங்கள் உள்ள மரங்களில் வாழ்கிறது.  உணவு: பூச்சி, அந்திப்பூச்சி  எதிரிகள்: பாம்பு, வௌவால், சிலந்தி, பறவை  ஐயுசிஎன் செம்பட்டியல்: அழியும் நிலையில் இல்லாதவை (Least Concern LC) https://www.iucnredlist.org/species/55290/3028059

வேட்டையில் முந்தும் பூமா!

படம்
  வேட்டையில் முந்தும் பூமா! பூமா, ஜாக்குவாருக்கு இணையாக ஒப்பிடப்படும் உடல் அமைப்பைக் கொண்ட விலங்கு. இரவில் துடிப்பாக வேட்டையாடும். காடு தொடங்கி பாலைவனம் வரை தன்னை தகவமைத்துக் கொண்டு  வாழும் இயல்புடைய விலங்கு. பூமாவை குறிப்பிட ஆங்கில மொழியில் மட்டும் நாற்பது பெயர்கள் உண்டு.  அறிவியல் பெயர்: பூமா கான்கலர் (Puma concolor) குடும்பம்:  ஃபெலிடே (Felidae) வேறுபெயர்கள்:  கூகர் (Cougar), பாந்தர் (Panther), காடாமௌன்ட்(Catamount) தாயகம்: அமெரிக்கா அடையாளம்  மார்பும், வயிறும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மீதியுள்ள இடங்களில் பழுப்பு நிற முடி இருக்கும். வாலின் முனையில் கறுப்பு நிறம் உண்டு. வட்டவடிவில் வயிறு, சிறிய தலையைக் கொண்டது.  சிறப்பம்சம் சிறுத்தை போல முதுகெலும்பு நீளமாக இருப்பதால், வேட்டையாடும் வேகம் மணிக்கு 80 கி.மீ. மேற்புறமாக பாறைகளின் மீது 5.4 மீட்டரும்,  கீழ்ப்புறமாக 12  மீட்டர் தூரமும் தாவும் திறன் கொண்டது. இரையின் பின்னாலிருந்து கழுத்தை குறிவைத்து தாக்கி வீழ்த்தும்.  நீளம்  ஆண் (2.4 மீ.), பெண் (2.05 மீ.) எடை  ஆண் (52 முதல் 100 கி.கி வரை), பெண் (29 முதல் 64 கி.கி வரை) வேகம் - மணிக்கு 64 -