இடுகைகள்

புவியியல் ஆராய்ச்சியாளர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் அதிர்ஷ்டசாலி!- குசலா ராஜேந்திரன்(தேசியவிருது விஞ்ஞானி)

படம்
"அமெரிக்காவில் புகழ்பெற்ற திறமையான புவியியலாளர்களிடம் பயிற்சிபெற்று இந்தியா திரும்பியதும் என்னால் ஆய்வுகளை சரியாக செய்யமுடியுமா என்று பயமிருந்தது. ஆனால் கற்றலுக்கும் அறிவுக்கும் அமெரிக்கர்கள் தேர்வை விட முக்கியமளித்தனர்" என புன்சிரிப்புடன் பேசும் குசலா ராஜேந்திரன் கடந்த மாதம் இந்திய அரசின் தேசிய விருதை பெற்ற முதல் பெண் ஆராய்ச்சியாளர். 1970 ஆம் ஆண்டு ஐஐடி ரூர்க்கியில் புவி இயற்பியல் படிக்க சேர்ந்தபோது அவரது வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் ஆண்கள். இவர் மட்டுமே பெண். பின்னர் மேற்படிப்புகளுக்கும் இதே நிலைமை நீடிக்க, சக, மூத்த மாணவர்களின் அறிவுரைகள் உதவி கிடைக்காமல் தடுமாறியுள்ளார் குசலா. "இந்திய பெண்கள் தங்கள் லட்சியத்தில் பத்து சதவிகிதம் கூட நிறைவேறாத நிலையில் என் குடும்பத்தின் ஆதரவினால் நான் நினைத்த விஷயங்களை சாதித்துள்ளனே. கொஞ்சம் அதிர்ஷ்டம் என் வாழ்வில் இருந்தது என நினைக்கிறேன்" என அதிர சிரித்தபடி பேசுகிறார் குசலா.  1987 ஆம் ஆண்டு தெற்கு கரோலினாவில் முனைவர் படிப்பை முடித்து வந்தவுடன் திருமணம் முடிவாகி புவியியலாளரான சி.பி.ராஜேந்திரனை மணந்தார். 199