இடுகைகள்

சாண்ட்விச் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உப்புக்கு மாற்று உப்பு இருக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி சாண்ட்விச்சை எப்படி எடுத்துசெல்வது? கையில்தான் என்று சொல்லுவது அரசு பதில்கள் போல சிம்பிளாக ஆகிவிடும். இருந்தாலும் சூழல் முக்கியம் அல்லவா? அலுமினியம் பாயில்தான் எளிதாக கிடைக்கும். ஆனால் இதனை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் பாதிப்பு அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும் காகிதம் என்பதை உடனே சாப்பிடுவதற்காக கொடுப்பார்கள். அதனை பார்சல் பெற்று கொண்டு செல்ல அந்த காகிதம் தாங்காது. காகிதத்தில் சுற்றி  உங்கள் கேர்ள் பெஸ்டியின் பையில் வைத்துவிடுங்கள்.  உப்புக்கு மாற்றாக வேறு உப்புகள் ஏதேனும் உண்டா? ஏன் இல்லாமல்? பொட்டாசியம் குளோரைடை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஒரே பாதிப்பு, நீங்கள் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால்  இதைப்பற்றி அவருக்கு கூறவேண்டும். சிறுநீரக பிரச்னை இருந்து பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தினால் ஆபத்து அதிகம். உப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடிற்கும் பொட்டாசியம் குளோரைடிற்கும் ருசியில் பெரிய வேறுபாடு கிடையாது.  சயின்ஸ்போகஸ் 

பார்சலுக்கு அலுமினிய பாயில் ஆபத்தானது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வேலைக்கு செல்லும் அவசரம். சாண்ட்விச்சை ரெடி செய்து எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். எதில் கட்டி எடுத்துக்கொண்டு செல்வீர்கள். நிச்சயமாக பிளாஸ்டிக்கை கூறமாட்டேன். காரணம், அதனை மறுசுழற்சி செய்வது மிக கஷ்டம். எனவே காகிதம் சார்ந்த பொருட்களை இதற்கு பயன்படுத்தலாம். இப்போது நான் டிபன் வாங்கி வந்த செல்வியக்கா கடையில், பார்சலுக்கு அலுமினிய பாயில் கவரைப் பயன்படுத்துகிறார்கள். இது தண்ணீர் மாசுபாடு, மறுசுழற்சி செய்வதற்கு கடினமானது. இதனை மீண்டும் ஆறு முறை பயன்படுத்தினால்தான் இதன் தயாரிப்புக்கு நியாயம் சேர்க்க முடியும். எனவே மெழுகு தடவிய காகிதங்களை நீங்கள் பயன்படுத்தலாம். நன்றி: பிபிசி