பார்சலுக்கு அலுமினிய பாயில் ஆபத்தானது ஏன்?
ஏன்?எதற்கு?எப்படி?
மிஸ்டர் ரோனி
வேலைக்கு செல்லும் அவசரம். சாண்ட்விச்சை ரெடி செய்து எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். எதில் கட்டி எடுத்துக்கொண்டு செல்வீர்கள்.
நிச்சயமாக பிளாஸ்டிக்கை கூறமாட்டேன். காரணம், அதனை மறுசுழற்சி செய்வது மிக கஷ்டம். எனவே காகிதம் சார்ந்த பொருட்களை இதற்கு பயன்படுத்தலாம்.
இப்போது நான் டிபன் வாங்கி வந்த செல்வியக்கா கடையில், பார்சலுக்கு அலுமினிய பாயில் கவரைப் பயன்படுத்துகிறார்கள். இது தண்ணீர் மாசுபாடு, மறுசுழற்சி செய்வதற்கு கடினமானது. இதனை மீண்டும் ஆறு முறை பயன்படுத்தினால்தான் இதன் தயாரிப்புக்கு நியாயம் சேர்க்க முடியும். எனவே மெழுகு தடவிய காகிதங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
நன்றி: பிபிசி