பெண்களே சொர்க்கம்! அதில் நான் கடவுள்!
அசுரகுலம்
கியோசி ஒகுபோ
1935 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று ஜப்பானில் பிறந்த கியோசி, பெண்களை வல்லுறவு செய்து கொன்று போடுவதில் வித்தகர். 1971 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மட்டும் ஓவர் டைம் பார்த்து 8 பெண்களை ருசி பார்த்து கொன்று போட்டார்.
அரசு என்ன செய்யும்? அதேதான். 1976 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி கியோசி ஒகுபோவை தூக்கிலிட்டு கொன்று குற்றத்தின் அறிகுறியை மறைத்து மூடியது.
நாற்பத்தொரு நாட்களில் அரசை நடுங்க வைக்க முடியுமா? தனிகா இவன் எனும் புனைப்பெயரைக் கொண்ட கியோசி அதனைச் சாதித்தார். கூர்மையான ரசனை கொண்டவர் கியோசி, 16 முதல் 21 வயது கொண்ட பெண்களை மட்டுமே தன் பசிக்கு ருசி பார்த்தார் கியோசி.
ஜப்பானின் டகாசாகி எனும் இடத்தில் பிறந்தவர் கியோசி. அம்மா, பாதி ரஷ்யர், பாதி ஜப்பானியர். வளர்ந்த பருவத்தை பயத்திலேயே ஓட்டும்படி ஆனது. காரணம் அமெரிக்கா - ஜப்பான் போர் அப்போதுதான் நடைபெற்றது. ஆண்டு 1941.
1955 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று கியோசி ஒரு பெண்ணை வல்லுறவு செய்தார். அதே கனவில் டிச. 26 அன்று மற்றொரு பெண்ணை முயற்சித்தார். ஆனால் தேர்வில் தோல்வியுற்றார். அதோடு கைதான அவமானமும் சேர்ந்தது. சிறையில் இருந்தாலும் எந்த மாற்றமும் வரவில்லை. 1959 ஆம் ஆண்டு டிச.15 அன்று சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது.
1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மற்றொரு பெண்ணை பரீட்சித்து பார்த்தார். ஆனால் இம்முறையில் டெஸ்ட் நெகடிவ்தான். ஆனால் என்ன பெண் புகார் கொடுக்கவில்லை. அதனால் என்ன ஆச்சு? கியோசிக்கு கெட்டிமேளம் கொட்டியது.
1961 ஆம் ஆண்டு மே 5 அன்று திருமணமானது. ஆணும், பெண்ணுமாக இருபிள்ளைகள் பிறந்தனர். ஆனாலும் காமவெறி கியோசியை சும்மாவிடவில்லை. சுக்கி போகனாக பெண்களைத் தேடி அலைந்தார் கியோசி. 1965 ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று இரு பெண்களை மிரட்டி விதவிதமாக சுகித்தார். பின் புகார்கள் கிளம்ப 1967 ஆம் ஆண்டு ஜூன் ஏழு அன்று சிறைக்கு சென்றார்.
வெளியே வந்தவர் எவ்வளவு ஏங்கிப் போயிருந்தாரோ தெரியவில்லை. 41 நாட்கள். எட்டு பெண்கள் என்ற கணக்கை மிகச்சரியாக டாலி செய்தார். கற்பழிப்பு கூட பரவாயில்லை. உயிர்களை உரித்துப்போட்டதுதான் கியோசிக்கு மரணதண்டனை விதிக்க காரணம்.
கடைசி பெண்ணை மே பத்து அன்று ருசித்து கொன்றுபோட்டார். உடலைத் தேடி அவரது சகோதரர் அலைந்த அலைச்சல் வேதனையானது. இறுதியில் கியோசியை பிடித்து கைக்கு காப்பு போட்ட போலீஸ், மேபேஸி கோர்ட்டில் மரணதண்டனையை வாங்கிக் கொடுத்துவிட்டது. கியோசி அப்பீல் கூட செய்யவில்லை. 1976 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
இந்த தேதி சாகப்போகிறாய் என்று சொல்லி ஒருவரைக் கொல்வது எவ்வளவு பெரிய கொடூரம். தூக்கிலிடும் அன்று கியோசி எழுந்து நிற்க கூட உடலில் தைரியமின்றி தடுமாறினார் என்கிறது காவல்துறை தரப்பு.
கொலைபாணி
எந்த ஆயுதமுமில்லை. கைகள்தான். நன்றாக பிராணவாயு செல்லும் மூச்சுக்குழலை உடலின் எடையை ஆயுதமாக்கி ஒரே அழுத்.... சோலி முடிந்தது. பாடியை தூக்கி புதரில் வீசினால், பொறுக்க போலீஸ் வந்துவிடும். ரைட்.
சிறுவயது
குடும்பத்தின் எட்டாவது வாரிசு. பெற்றோர்கள் அரவணைத்துத்தான் வளர்த்தினர். ஆனால் எங்கோ பிழை நேர்ந்துவிட்டது. பக்கத்து வீட்டில் வைத்திருந்த பழமரங்களில் பழங்களைத் திருடினார். அதை அந்த வீட்டுக்கார ர் புகார் சொல்ல, அவரது அம்மா அதற்கு கியோசிக்கு வக்காலத்து வாங்கினார். பின்னாளில் கியோசியின் வேணும் என்றால் வேணும் என்ற குணம் தீவிரமாக இதுவும் ஒரு காரணமானது.
பள்ளியில் ரஷ்யத்தனமாக நடமாடியவரை கடுமையாக வகுப்பில் கிண்டல் செய்தனர். இதனால் மனம்சுருங்கியவர், படிப்பிலும் கோட்டை விட்டார். தொடர்ச்சியாக கிண்டல்கள், பள்ளி மதிப்பெண்களில் தடுமாற்றம் கியோசியை விரக்தி கொள்ள வைத்தன.
பெண்கள் உஷார்!
அவரது கவனம் பெண்களிடம் திரும்பியது. பெண்களை ஏகவசனத்தில் பேசுவது, சில்மிஷங்கள் செய்ய முயற்சிப்பது குறித்து பள்ளி நிறைய அறிக்கைகளை கியோசியின் வீட்டுக்கு அனுப்பி எச்சரித்தது. இறுதியில் பக்கத்துவீட்டு நான்கு வயது குழந்தையிடம் கியோசி அத்துமீறினார். அப்போது வரை அவரைக் குறித்த புகார்களை ஏதோ சின்னப்பையன் குறும்புக்காக செய்கிறான் என நினைத்துக்கொண்டிருந்த து அவரது குடும்பம்.
வயதுக்கு மீறிய வேகம் பதினொருவயதில் கெட்டப்பெயரை ஏற்படுத்தியது. அடுத்து, 19 வயதில் 17 வயது பள்ளி மாணவியை வல்லுறவு செய்தார். பதினெட்டு மாதங்கள் சிறை. ஐந்து மாதங்கள் இடைவெளியில் அடுத்த வல்லுறவு. மீண்டும் சிறை.
கொன்ற உடல்களை தொழில்பூங்காவிற்கான இடங்களிலும் கிராம புறங்களிலுள்ள குப்பைகளில் எறிந்தவர் எதற்கும் அஞ்சவில்லை. போலீஸ் பிடிக்கவரும்போது கூட விலைமாதுவுடன் சரச சல்லாபத்தில்தான் இருந்தார்.
போலீஸ் என்னை பிடித்து என்னிடமிருந்த மனிதநேயத்தை அகற்றிவிட்டனர். அதனால்தான் நானும் யாருக்கும் கருணை காட்டவில்லை என்று கோர்ட்டில் சொல்லிய தைரியசாலி. அடுத்த பிறவியில் கஞ்சா செடியாக பிறப்பேன். என்னை யாரும் அகற்றமுடியாது என சவால் விட்டார். 41 ஆவது பிறந்த நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பே தூக்கிலிடப்பட்டார்.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: ரேங்கர், கில்லர்பீடியா