போர்டு கேமில் கலக்கலாம் வாங்க!


Image result for board game lounge




போர்டு கேம் விளையாட்டில்
 கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?


இன்டோர் விளையாட்டுதான். ஆனால் அதிலும் பல்வேறு திறன்களைச் சொல்லித்தரத்தொடங்கியுள்ளன போர்டு கேம் விளையாட்டுகளுக்கான கஃபேக்கள். இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்?

டெப்ட்ஸில்லா என்ற விளையாட்டு கடன் எப்படி வளருகிறது என்பதை விளையாடுபவர்களுக்கு விளக்குகிறது. கடன், வட்டி ஆகியவற்றினையும் தெளிவாக காட்டுகிறது. வட்டி எப்படி வளர்ந்து சிக்கலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.

Related image




டிவியில் கேம் ஆப் த்ரோன்ஸ் பீக்கில் இருக்கும்போது மயிலாப்பூரில் போர்ட் கேம்களுக்கான கபேயை மென்பொருள் பொறியாளர்கள் மூவர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வருண் தேவநாதன், ஸ்ரீராம் மகாலிங்கம், ஷ்ரவண் சந்தோஷ் ஆகியோர்தான் இந்த டிரெண்டை மயிலாப்பூரில் அமுல்படுத்தியிருப்பவர்கள்.

தொண்ணூறுகளில் உலகில் போர்டு கேம்களில் மாற்றம் தொடங்கியது. இதில் பல்வேறு ஐடியாக்களுடன் போர்டு கேம்கள் புதிதாக ஐரோப்பாவில் ரீஎன்ட்ரியாகி மக்களைக் கவர்ந்தன. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்த போர்டு கேம்களில் செட்லர்ஸ் ஆப் கேட்டன், சிட்டாடெல், புவர்ட்டோ ரிகோ ஆகியவை முக்கியமானவை.

2017 இல் மட்டும் போர்டு கேம்களின் வருமானம் 7. 2 பில்லியன் டாலர்கள் ஆகும். 2023 இல் இதன் எண்ணிக்கை 12பில்லியனாக அதிகரிக்கும் என ஸ்டாடிஸ்டா தகவல்தளம் அறிக்கை தருகிறது. 2015 ஆம் ஆண்டு அர்ஜூன் தி போர்டு கேம் லான்ஞ் என்ற நிறுவனத்தைத் தொடக்கியிருக்கிறார். அர்ஜூன் சுகுமாரன், சித்ரா அப்பாசாமி இருவரும் தொடங்கிய இந்த நிறுவனத்தில் தற்போது ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் மீட்டிங், விளையாட்டு, ஃபேஸ்புக்கில் பிரசாரம் என பரபரப்பாக செயல்பட்டுவருகிற நிறுவனம் இது.


Image result for board game GIF

இங்கு வருபவர்கள் அனைவருக்குமே விளையா ட்டு தெரிய வேண்டுமென்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கு அங்குள்ளவர்களே சேர்ந்து விளையாடி கற்றுத்தருகின்றனர். பொதுவாக ஒருமணிநேரத்திற்கு என ரேட் சொல்லுவதால், நீங்கள் உங்கள் நண்பரோடு செல்வது சிறப்பு. போர்டு கேம் லான்ச் உள்ளிட்ட இடங்களில் டீ காபி, கேக், ஜூஸ் என உணவு வகைளையும் ஆர்டர் செய்து பிரமாதப்படுத்தலாம்.


நன்றி: திடைம்ஸ் ஆப் இந்தியா