டாய்லெட் பிசினஸ் - கொட்டும் லாபம்!



Image result for johnny on the spot


டாய்லெட் ஏக் பிரேம் கதா என அக்சய் குமார் லெவலுக்கு கழிவறை பாசம் இல்லாவிட்டாலும், வயிறு நெருக்கித்தள்ளும்போது கழிவறைக்குள் போய்த்தானே ஆகவேண்டும். சென்னையின் நம்ம டாய்லெட் போல உலகெங்கும் தற்காலிக கழிவறைகளின் தேவை அதிகரித்துவருகிறது.


நாற்றமடிக்கிற பிசினஸ்தான். எவ்வளவு தேறும் என நினைக்கிறீர்கள். 2 பில்லியன் டாலர்கள் சும்மாயில்லை. கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு என நடத்தும் இடங்களிலெல்லாம் கழிவறை வசதி இருக்கிறதா என இனி பார்த்துக்கொண்டு கவலைப்பட முடியாது. பின்னே உலகம் மாறுகிறது இல்லையா, இந்த சர்வீசுக்கும் நிறைய கம்பெனிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.


ஏழை முதல் பணக்காரர் வரை கழிவறை வசதிகள் மாறினாலும் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது என்பது நிஜம்தானே? குறைவான நீர்வளம், அதிக நீரை செலவழிப்பது, சரியான பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கழிவறைகள் பொதுவாக நிறைய அமைக்கப்பட வேண்டும் என்பது சரியான கோரிக்கையே.


1940 ஆம் ஆண்டு இரண்டாம்  உலகப்போரின்போது, கழிவறைக்கு நடந்து கால் காய்ப்பு காய்ச்சிடுமே என பயந்தவர்கள், கழிவறையை போர்ட்டபிளாக மாற்றிப் பயன்படுத்தினர். மரக்கதவுகள் மாறி ஃபைபர் வந்தது. கழிவறை நாற்றத்தை அகற்றும் நீலநிற திரவமும் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவில் இத்துறையில் போட்டியிட்டு வரும் நிறுவனங்கள் இவைதான். மிஸ்டர் ஜான், எ ராயல் ஃப்ளஷ், ஜான் டு கோ, ஜானி ஆன் தி ஸ்பாட்.


அதைப்பற்றிய சின்ன தகவல்கள்


தற்காலிக கழிவறைகளில் 265 லிட்டர் கழிவுகளை தேக்கி வைக்க முடியும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்கும்போது, பார்வையாளர்கள் ஏற்படுத்திய கழிவு 702,743 லிட்டர்கள்.

அரிசோனாவில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் வாடகைக்கு எடுக்கப்படும் தற்காலிக கழிவறைகளின் வாடகை ஒரு நாளுக்கு எவ்வளவு தெரியுமா? 178 டாலர்கள்.


உலகெங்கும் டாய்லெட் வசதிகளின்றி 2.8 பில்லியன் மக்கள் தவித்து வருகின்றனர்.

தற்காலிக டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதால் 178 மில்லியன் லிட்டர் நீர் சேமிக்கப்படுகிறது.

நன்றி: க்வார்ட்ஸ்