பெண்கள் கருக்கலைப்பை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?


Image result for abortion




அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வது தொடர்பான சர்ச்சை தீராமல் நடைபெற்றுவருகிறது. ஜார்ஜியா, கென்டக்கி, மிசௌரி ஆகிய மாநிலங்களில் கருக்கலைப்புக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது. அலபாமாவில் மட்டும் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வல்லுறவு, தாய்க்கு ஆபத்து எனும் நிலையில் கருக்கலைப்பு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவு சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியவில்லை.

பெண்களின் உடல்மீதான சமூகத்தின் கட்டுப்பாடாகவே பெண்ணியலாளர்கள் இதனைப் பார்க்கின்றனர். கட்டுரைகளையும் எழுதி வருகின்றனர்.


அமெரிக்காவில் நான்கு பெண்களில் ஒருவர் கருக்கலைப்பு செய்கிறார். 2011 வாக்கில் திட்டமிடப்படாத கருக்கலைப்பு என்பது பாதியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு குடும்பக்கட்டுப்பாடு திட்டங்கள் மற்றும் மருந்துகள்தான்.

அரசுக்கு கருக்கலைப்பு என்பது பொருளாதாரம் சார்ந்த ஒன்று. ஆனால் மதம் அரசியலுக்குள் நுழைந்துவிட்டால், அது கலாசாரம் சார்ந்ததாக மாற்றப்பட்டு விடுகிறது.

தற்போது அமெரிக்காவில் 54 சதவீதம் பேர் கருக்கலைப்பு தொடர்பான மருந்துகளைப் பயன்படுத்தவில்லை. அங்கு 40 வயதுக்குள்ளான பெண்களில் 25 சதவீதம் பேர் கருக்கலைப்பு செய்துவருகிறதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.




நன்றி: தி கான்வர்சேஷன்