ஆபீசா, வாழ்க்கையா - சுதீர்பாபு எதை தேர்ந்தெடுத்தார்?




Image result for nannu dochukunduvate telugu full movie



நன்னு டோச்சுகுண்டுவட்டே (nannu dochukunduvate) - தெலுங்கு

இயக்கம் - ஆர்.எஸ்.நாயுடு

ஒளிப்பதிவு - சுரேஷ் ரகுடு

இசை அஜனீஸ் லோக்நாத்



ஆபீஸ் வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையும் கையாளத் தெரியாமல் கபடியாடும் இளைஞனின் கதை.


Image result for nannu dochukunduvate telugu full movie




சிம்பிளான கதை. கார்த்திக், ஐ.டி கம்பெனி மேனேஜர். ஒவ்வொரு நொடியும் அவரே செதுக்கியது போல உழைக்கிறார். யாருக்காக தேசத்திற்காகவா? அவருக்காக அவருக்கு மட்டுமே. அமெரிக்காவுக்கு போய் செட்டிலாகும் பிராமண லட்சியத்தோடு உழைக்கிறார்.


ஆனால் இடையில் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதேதான். உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டுத்தான் சாவேன் என அவர் அடம்பிடிக்க, அதற்காக ஒரு பெண்ணைத் தேட நாயகி அகப்படுகிறார். அப்புறம் நாடக காதல் உண்மைக்காதல் ஆக சுபம். நாமும் தண்ணிக்குடத்தை எடுத்துக்கொண்டு அதனை நிரப்ப கைபம்பை அடிக்கப்போகலாம். 

படத்தை பாஸ் செய்து பார்க்க அவசியமில்லை. சில உணர்ச்சிகரமான காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. கார்த்திக் தன் அப்பாவுடன் தான் இழந்த விஷயம் குறித்து பேசும்  காட்சி, கடைசியில் மேக்னாவுடன் கண்ணீரோடு பேசும் காட்சி.

Image result for nannu dochukunduvate telugu full movie



மற்ற இடங்களில் சுதீர் பாபு நடிக்கவில்லையா என்று கேட்க கூடாது. அவரின் கேரக்டருக்கு ஏற்ப நடித்திருக்கிறார். பணம், லட்சியம் என மனசு எதையும் சிதறவிடாமல் இருப்பவர், மேக்னாவிடம் மட்டுமே லைட்டாக தளும்புகிறார். யெஸ் டூயட்டிற்கு பல்வேறு இடங்களுக்கு போய்வருகிறார்கள்.  படத்தில் மேக்னாவின் அம்மா கேரக்டர், கார்த்திக்கின் சமையல்காரர், மேக்னாவின் பிரின்சிபால் ஆகிய கேரக்டர்கள் வித்தியாச சேட்டையால் கவர்கிறார்கள்.


சண்டைக்காட்சிகள் வேறுவழியின்றி வைத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு நாயகி நாபா நடேஷ் கால்ஷீட் கொடுப்பதில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். அதற்காக காமெடி நடிகரை வைத்து வயிற்றிலா எட்டி உதைக்கச் சொல்லுவது? செருப்பு தடம் கூட அப்படியே இருந்தது. எங்க பிஞ்சு நெஞ்சு தாங்குமா? கண்கள் பேசும் அழகி நாபா நடேஷை இப்படி செட் பிராப்பர்டியாக பயன்படுத்தினால் எப்படி? நிறைய இடங்களில் வரும் காமெடியை ரசிக்க முடிகிறது.


பாடல்களுக்கு உணர்ச்சிகர காட்சிகளுக்கு அஜினேஸ் லோக்நாத் இசையமைத்து கொஞ்சமேனும் நம்மை ஆறுதல்படுத்துகிறார். அமெரிக்கா போகும் ஆசை சொல்லுபவர், அதனைக் காட்டும் காட்சிகளில் பயங்கரமாக தடுமாறி இருக்கிறார் ஆர்.எஸ்.நாயுடு.

 Image result for nannu dochukunduvate telugu full movie


காலத்திற்கேற்ற கதை. ஆபீசா, அமைதியான வாழ்க்கையா என்ற லைன் ஈர்க்கிற அளவு படத்தில் காட்சிகள் கிடையாது.

- கோமாளிமேடை டீம்