ஈராக் -2 போர் தொடக்கமா?










அமெரிக்கா - ஈரான் போரா, வணிகமா?


அமெரிக்கா தொடர்ந்து எண்ணெய் வளத்திற்காக மத்தியகிழக்கு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ஈராக்குடன் நடந்த போரின் தொடக்க காலப்போக்கை நினைவுப்படுத்துவதாகவே ஈரானுடன் நடக்கும் வார்த்தை யுத்தங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்டகனில் ஈராக்கிலிருந்து ஆபத்தான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை டொனால்டு ரம்ஸ்ஃபீல்டு பத்திரிகையாளர்களிடம் வார்த்தை விளையாட்டு மூலம் தெரிவித்தார். இப்போது ஈரானுடனான அணு ஒப்பந்தம் கைவிடல் ஆகியவையும் ஈராக் -2 ரகத்தில் அமைந்துள்ளதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கிரெய்க் தியல்மன் கூறுகிறார். இது பற்றி காங்கிரசில் விவாதிக்காமல் எப்படி அரசு முடிவெடுக்க முடியும என்று கேட்கும் இவரது கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.


நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, ட்ரம்ப் உடனே மறுப்பு தெரிவித்தார். அது போலிச்செய்தி. அவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை நாங்கள் ஈராக்குக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். எங்களுக்கு அப்படியொரு திட்டம் இல்லை. அனுப்புவதாக இருந்தாலும் இன்னும் அதிக படையினரையே அனுப்புவோம் என திகில் கிளப்பினார்.

அதோடு ட்ரம்புக்கு ஆலோசகர் போல்டன் மீதும் விமர்சனங்கள், கோபம் இருக்கிறது. காரணம், வெனிசுலா விவகாரத்தில் போல்டனின் தலையீட்டை கிடைக்கும் வாய்ப்புகளில் கேலி செய்து வருகிறார். அமெரிக்கா தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு ராணுவத்தை அனுப்புவது பின்னர் திரும்ப பெறுவது என்ற விளையாட்டை அதிக நாட்கள் செய்ய முடியாது. அந்நாட்டு மக்களும் இனி அதை ரசிக்க மாட்டார்கள். உள்நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்காமல், இனவெறி பேச்சு, போர் என மக்களை அதிக நாட்கள் ட்ரம்ப் திசைதிருப்ப முடியாது.


ஆங்கில மூலம் - ஜிஜிலியோ, கில்சனன்

நன்றி: அட்லாண்டிக் இதழ்