எவரெஸ்டில் பயணிகள் இறப்பது ஏன்?
அண்மையில் எவரெஸ்டில் ஏறிய பலர் காயமுற்றும் இறந்தும் உள்ளனர். என்ன காரணம்?
இந்த வாரம் மட்டும் ஏழுபேர் இறந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நிகால் பக்வான் என்பவரும் இந்த பட்டியலில் அடக்கம். முன்பை விட சாதனைக்கான ஏக்கம் உலகில் அதிகரித்துள்ளது. எவரெஸ்டில் ஏறுவதற்கான காத்திருப்பு பனிரெண்டு மணிநேரமாக அதிகரித்துள்ளது. பனிரெண்டு மணிநேரம் காத்திருந்து நாங்கள் மேலே சென்றோம் என்கிறார் பிரான்ஸ் பிரெஸ்ஸே நிறுவனத்தைச் சேர்ந்த கேசவ் பாடெல்.
எவரெஸ்டில் ட்ராஃபிக் ஜாமா என்று நினைப்பீர்கள். உண்மைதான். இதில் ஒருவருக்கு ஆக்சிஜன் போதாமல் பிரச்னை ஏற்பட்டால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம்.
உலகின் உயரமான மலைத்தொடரான எவரெஸ்ட் 29 ஆயிரம் அடி கொண்டது. கடல்மட்டத்திற்கு மேல் உள்ள சிகரம் இது. மலையில் ஏறுபவர்கள் அங்கு சென்றதும், மூச்சுத்திணறலை உணர்வார்கள் என்கிறார் மருத்துவர் ஆண்ட்ரூ லூக்ஸ்.
இந்த பாதிப்பைப் போக்க டயாமோக்ஸ் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது டெக்ஸ்மெத்தோசோன் என்ற மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மலையில் ஏறுபவர்களுக்கு ஹேஸ் எனும் ஹை அல்டிடியூட் செரிபிரல் எடிமா பாதிப்பு ஏற்படும். ஒன்பதாயிரம் அடிக்கும் மேல் ஏறுபவர்களுக்கு ஒரு சதவீத ஹேஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மலையில் ஏறும்போது காற்று குறைவதால், மனநிலை மாற்றம், கடுமையான உடல் சோர்வு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். தற்போது மலை ஏறும் வேகத்தில இருப்பவர்கள், பெரும் பணத்தைச் செலவிட்டு இதனை செய்ய காத்திருக்கிறார்கள். தூங்காமல், சரியாக சாப்பிடாமல் எவரெஸ்டில் ஏறும் தீரம் எதற்கு என்றே மருத்துவர்களுக்கு புரியவில்லை.
நன்றி: லிவ் சயின்ஸ்