ரத்தத்தில் காஃபீன் எவ்வளவு நேரம் இருக்கும்?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
காபி, கோலா ஆகியவற்றிலுள்ள காஃபீன் நம் உடலில் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கும்?
லியோ காபியில் சுரத்தே இல்லாத காபியை ஆஹா பேஷ் பேஷ் என சொல்லி குடித்தால் பிரமாதமாக காலை விடியும். குடித்தவுடனே ரத்தத்தில் 45 நிமிடங்கள் கழித்து வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆனால் இதே காஃபீனை மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், காஃபீன் ரத்தத்தில் பரவ 60 அல்லது 75 நிமிடங்கள் ஆகும். ஆறுமணிநேரங்களுக்குப் பிறகு காபீன் அளவு பாதியாக குறைந்துவிடும் என்பதே உண்மை. இதன் அர்த்தம், மாலை ஏழுமணிக்கு மாமி மெஸ்ஸில் காபி குடித்தால், இரவு பதினொரு மணிக்கு படுக்கும்போதும் ரத்தத்தில் காபீன் அழுத்தம் இருக்கும்.
நன்றி: பிபிசி
படம் -டெம்போ இங்க்லீஸ்