க்ரௌடு பண்டிங் அவசியமா - அத்துமீறலா?





Image result for crowdfunding



நோயாளிகளைக் காப்பாற்றும் மக்கள் பங்களிப்பு!


நோயாளிகளைக் காப்பாற்றுங்கள் என பல்வேறு செய்தித்தளங்கள், நாளிதழ்களில் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நீங்களும் கூட உண்மையை உறுதி செய்து சிலருக்கு பணம் அனுப்பி வைத்திருப்பீர்கள்.


தற்போது இப்படி பணமற்ற நோயாளிகளுக்கு சிகிச்சைகளுக்கான பணம் திரட்டும் வலைத்தளங்கள் தோன்றியுள்ளன. இம்பேக்ட் குரு, கீட்டோ, மிலாப் ஆகிய வலைத்தளங்கள் இம்முறையில் செயல்படுகின்றன.

இதில் எப்படி பணத்தைப் பெறுவது?

உங்கள் உறவினருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த விபரம்,சிகிச்சை செலவு ஆகியவற்றை சுருக்கமாக எழுதவேண்டும். நிதி உதவி தேவை என கோர வேண்டும். அவ்வளவேதான்.

அவசர உதவி என்றால் அதனையும் குறிப்பிட்டால் நல்லது.


இதில் மேற்சொன்ன வலைத்தளங்கள் ஏன் ஈடுபடுகின்றன. திரட்டப்படும் நிதியில் அவர்களுக்கு பங்கு 5- 10 சதவீதம்.


இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை என்பதால் கமிஷன் தொகைகளுக்கா க போலியாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டாலும் யாரும் அதனை கேள்வி கேட்க முடியாது.


நோயாளியின் நோய் விவரங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இதில் வெளிப்படைத்தன்மை குறைவு.


வர்த்தக நோக்கற்ற தன்னார்வ நிறுவனங்கள் மட்டுமே நிதிதிரட்ட இந்தியாவில் அனுமதி உள்ளது. இதுபோல தனியார் வலைத்தள நிறுவனங்கள் நிதிதிரட்டக்கூடாது என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நியூரோ சர்ஜன் டாக்டர் தீபக் அகர்வால்.


அதேசமயம் இதில் வெற்றிகளும் இல்லாமல் இல்லை. டெல்லியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் தற்போது நடைபெற்றுவரும் 20 சதவீத அறுவைசிகிச்சைகள் மேற்சொன்ன மக்கள் பங்களிப்புடன் வரும் நிதிதிரட்டல்மூலம் நடைபெறுகிறது.


இதில் குறிப்பிட்டுள்ள கீட்டோ வலைத்தளம் நாட்டிலுள்ள 80 மருத்துவமனைகளுடன் தொடர்பில் உள்ளது. சிகிச்சைக்கு பணம் தரமுடியாதவர்களை தொடர்புகொண்டு உதவுகிறது இத்தளம். கீட்டோ தளம் 2012 ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது.


நாங்கள் நிதியளிப்பவர்களை சமூக வலைத்தளம் வழியாக சந்தித்து தேவையை முன் வைக்கிறோம். 2.5 மக்களை நாங்கள் எங்கள் தொடர்பில் வைத்துள்ளோம். இதில் 5 சதவீத தொகை எங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம் என்கிறார் கீட்டோ வலைத்தள நிறுவனர் அடெனாவால்.

மிலாப், இம்பேக்ட் குரு வலைத்தளங்களும் இம்முறையில் செயல்படுகின்றன. இவை பெறும் கமிஷன் தொகை மட்டும் மாறுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில், அடாப்ட் எ பேஷன்ட் எனும் முறையைப் பயன்படுத்தி நோயாளிக்கு உதவுவதை உறுதி செய்கின்றனர். இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

நன்றி: டைம்ஸ்