ஆண்களின் வன்முறைக்கு காரணம் இதுதான்!






Image result for fight club



ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி

ஆண்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான கலவரங்கள், வன்முறைகள் அனைத்திலும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்கு காரணம் என்ன?

உலகமெங்கும் பெரும்பாலான சமூகங்களில் ஆண்களுக்கு அதிகாரம் கொடுத்து அப்படி வளர்ப்பதுதான் காரணம். பெண்களை வீட்டுவேலைகள், அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான பயிற்சிகளை கொடுத்து வளர்க்கிறார்கள். இதனால் குற்றச்செயல்களில் இயல்பாகவே ஆண்களின் பங்கு அதிகமாக இருக்கும்.

பரிணாமவளர்ச்சி காலகட்டத்தில் ஆண்கள் தங்களின் வலிமையை நிரூபித்தால்தான் பெண்களைப் பெறமுடியும். இதனால் வலிமை என்பது ஒருகாலத்தில் ஆண்களுக்கு சமூக அந்தஸ்தாக இருந்தது. இன்று அது வீடாக, ஐடி வேலையாக, சொத்து மதிப்பாக மாறியிருக்கிறது அவ்வளவுதான்.


அண்மையில் 63 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இளைஞர்கள் தங்கள் வயதிலுள்ள பெண்களை விட அதிக சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கியக்காரணம், பரிணாம  வளர்ச்சிதான்.


நன்றி: பிபிசி