பரவும் 3டி துப்பாக்கி!
இணையத்தில் 3டி துப்பாக்கியின் ப்ளூபிரிண்ட் கிடைப்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இணையத்தில் துப்பாக்கிகளை உருவாக்குவது, அதற்கான உதவிகளை வழங்குவது வரையில் தனித்தனி குழுவாக இயங்கி வருகின்றனர்.
அரசு எங்களைப் பிடிக்க முடியாது. எங்கள் பெயரை நாங்கள் வெளியிடமாட்டோம். இங்கே பாருங்கள். துப்பாக்கி வைத்துக்கொள்வது தனிநபர் உரிமை. நீங்கள் எப்படி இதில் தலையிட முடியும்? என்கிறார் இவான் எனகிற இணையப்போராளி.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதை அரசு கண்டுகொள்ளாது. காரணம், சட்டப்படி அது தவறு கிடையாது. எனவே, வீட்டுக்கு ஒரு ரைபிளேனும் வைத்திருப்பார்கள். ஆனால் 3 டி துப்பாக்கிகளை வாங்குவது அப்படியல்ல. மேலும் துப்பாக்கிக்கான உரிமை என்பது உண்டு. 3டி துப்பாக்கிகளை யார் வேண்டுமானாலும் எடுத்து புழங்கலாம் என்பது ஆபத்துதானே? இணையத்தில் 3டி துப்பாக்கி என்று தேடினால் ஐந்து நொடிகளில் உங்களுக்கு துப்பாக்கியின் கேட் கோப்பு கையில் கிடைக்கும். உடனே, சூதானமாக 3டி பிரிண்டரை ஆர்டர் செய்தால் நீங்கள் துப்பாக்கியை உங்கள் கண்முன்னே தயார் செய்துகொள்ளலாம்.
நன்றி: ஃப்யூச்சரிசம்