கார்ன் எண்ணெய் நல்லதா?
பூர்ணா கம்பெனி தவிட்டு எண்ணெய்யுடன் சோள எண்ணெய் வணிகத்தையும் செய்து வருகிறது. சூரியகாந்தி எண்ணெய்க்கு இது போட்டியா என்று பார்த்தால் இது தனி வியாபாரமாகவே நடந்து வருகிறது.
உண்மையில் சோள எண்ணெய்யில் என்ன இருக்கிறது. புரதம், மாவுச்சத்து கிடையாது. ஒரு டீஸ்பூனில் (15 மி.லி) கலோரி, விட்டமின் இ, கொழுப்பு ஆகியவை உள்ளன.
சோப்பு,ஷாம்பூ, பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் எரிபொருளாக, தொழில்துறையில் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது.
பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கப்படும் சோள எண்ணெய் வீடுகளில் சமைக்கவே அதிகம் பயன்படுகிறது. சமையலில் வறுக்க இதனைப் பயன்படுத்தலாம். கொதிநிலை அதிகம் என்பதால் இதற்கு உதவுகிறது.
விட்டமின் இ, லினோலெய்க் அமிலம், பைட்டோஸ்ட்ரோல் ஆகிய விஷயங்கள் இருப்பதால் இதயநலம் காப்பதற்கான எண்ணெய் பட்டியலில் சோள எண்ணெய்க்கும் இடம் உண்டு.
ஓமேகா 6 ரக கொழுப்பு அதிகம் என்பதால் இதனை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அது எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தும். நூறு சதவீத கொழுப்பு கொண்ட எண்ணெய்.
மருத்துவர்கள் சோள எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
இதில் ஆஃபர் போட்டால் வாங்குவது, எந்த எண்ணெய்யாக இருந்தாலும் காசு குறைவாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பட்ஜெட் பத்மநாபன்களுக்கு இந்த கட்டுரை பொருந்தாது.
நன்றி: ஹெல்த்லைன்.