இடுகைகள்

புற்றுநோய். இளைஞர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கா மென்தால் சிகரெட்டுக்கு விதித்த தடை!

படம்
  அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு, மென்தால் சிகரெட்டுகளையும், பல்வேறு வித ஃபிளேவர்களில் வரும் சிகார்களை தடுக்க திட்டமிட்டுள்ளது. இது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இளவயதினரை பெரிதும் பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது.  எஃப்டிஏ செய்துள்ள ஆய்வில் 85 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மென்தால் சிகரெட்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.  இதனை வெள்ளையர்கள் 30 சதவீதம்தான் பயன்படுத்துகிறார்கள். நாற்பது வயதிற்கு மேல் இந்த சிகரெட்டுகளை புகைக்கும் அளவு குறைகிறதா என்று உறுதியாக தெரியவில்லை.  இந்தியாவின் நிலை இந்தியாவில் அமெரிக்காவில் விதித்த தடை போல எதுவுமே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. இங்கு புகையிலை, பீடி என்பதற்கு பெரிய மார்க்கெட் உள்ளது. எனவே, பல்வேறு ஃபிளேவர்களில் வரும் சிகரெட்டுகள், சிகார்கள் என்பது மேல்தட்டினர் பயன்படுத்துவதாகவே உள்ளது. எனவே தடை விதித்தாலும்  எப்போதும் போலத்தான். எதுவுமே பயன் அளிக்காது.   இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 26.7 கோடி. இவர்களில் பதினைந்து அதற்கு மேல் உள்ளவர்களும் அடங்குவார்கள். இந்த தகவலை குளோபல் அடல்ட் டோபாகோ சர்வே அமைப்பு தெரிவித்துள்ளது.