இடுகைகள்

சர்ச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையை மறைக்காதபோது எதுவும் உங்களுக்கு சவாலாக இருக்காது - காஸ்டர் செமன்யா

படம்
  காஸ்டர் செமன்யா  விளையாட்டு வீரர் ரேஸ் டு பி மைசெல்ஃப் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளீர்கள். இதற்கான அவசியம் என்ன? நீங்கள் அமைதியான நல்ல மனநிலையில் இருக்கும்போதே சொல்ல வேண்டிய கதையை சொல்லவேண்டும். இந்த நேரத்தில் எனது ஆதரவு தேவைப்படுவோர்களுக்கு உதவுகிறேன். எனது கதை, வாய்ப்பு மறுக்கப்படுவோர்களுக்கானது. இதன் வழியே நீங்கள் யாரோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என நினைக்கிறேன்.  நீங்கள் வளரும்போது சிறந்த கால்பந்து வீரராக இருந்தீர்கள். அந்த விளையாட்டு புறவயமானது என்றும் எழுதுவது அகவயமானது என்றும் கூறியிருந்தீர்கள். உங்களது தேர்வாக அகவயமானதை தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? கால்பந்து விளையாடும்போது நீங்கள் தனியாக இருக்கமாட்டீர்கள். குழுவாக இருப்பீர்கள். அணியில் உருவாகும் பிரச்னைகளை குழுவாக அமர்ந்து தீர்க்க முயல்வீர்கள். சிலசமயங்களில் அவற்றை தீர்க்க முடியாமல் கூட போகலாம். ஆனால் தனிப்பட்ட வீர்ராக இயங்கும்போது வெற்றி, தோல்வி என்பது எனக்குமட்டுமே உண்டு. ஆனால் அப்படி இயங்கும்போது எனது மனதில் சுதந்திரத்தை உணர்கிறேன். எதற்கும் கவலைப்படுவதில்லை.  உங்கள் மனைவியை முதன்முதலாக வீரர்களி

கிம் கதர்ஷியன் - உடலையே பிராண்டாக்கி ஸ்கிம்ஸ் ஆடை நிறுவனத்தை தொடங்கிய துணிச்சல்காரி

படம்
  ஸ்கிம்ஸ் - ஆடைகள் கிம் கதர்ஷியன் கிம் கதர்ஷியன் - ஸ்கிம்ஸ் கிம் கதர்ஷியன் உங்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருக்காது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என பல்வேறு இடங்களில் கிம்மைப் பார்த்திருப்பீர்கள். கிம், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது உடல் அமைப்பு மூலம் பிறருக்கு அறிமுகமானவர். மார்பகங்கள், புட்டங்கள் என தன்னை அலங்காரப்படுத்திக்கொண்டு கூடுதல் பெண் தன்மையோடு இருப்பவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான மக்கள் பின்தொடர்கிறார்கள். கிம், தனது பிரபலம் அப்படியே காலத்திற்கும் இருக்கும் என நம்புகிற முட்டாள் அல்ல. எனவே, அந்த பிரபலத்தை வணிகத்திற்கு திருப்பிவிட முடிவெடுத்தார். அதன்படி தோழி, தோழியின் கணவர் ஆகியோருடன் சேர்ந்து ஸ்கிம்ஸ் என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். தொந்தி இருக்கும் பெண்கள் அணியும் ஷேப் வேர் எனும் உடைகளை இந்த   நிறுவனம் தயாரித்து விற்கிறது. பெரும்பாலும் இணையத்தில் உள்ள வலைத்தளம் மூலமாக அதிக ஆர்டர்கள் வருகின்றன. கிம், ஏற்கெனவே நகைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். இதற்கென தனி நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், வெற்றிகரமானவை என்று கூற முடியாது. ஸ்கிம்ஸ் நிறுவனத்தில

சர்ச்சையான விஷயங்களை கலந்து பேசுவோம் வாங்க! - வீனா பாட்காஸ்ட்

படம்
  வீனா பாட்காஸ்ட்  வீனா பாட்காஸ்டைக் கேட்கும்போது தோன்றுவது, இரண்டு நெருங்கிய நண்பர்கள் தங்களுக்குள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஜாலியாக பேசிக்கொள்ளும் முறைதான். அதில் ஒருவர் என்ன பெறுகிறார் என்பது கேட்பவரின் விருப்பம் சார்ந்தது.  வீனா பாட்காஸ்ட் ஐடியா சென்னையில் ஐடி வேலை பார்க்கும் வினுஷ்குமாரின் மூளையில்தான் உதித்திருக்கிறது. இவரும் இவரது நண்பரான நவீனும் போனிலேயே ஏராளமான விஷயங்களை பேசி தீர்த்திருக்கிறார்கள். இப்படி பேசுவதை நாம் ஏன் பாட்காஸ்ட் வழியாக செய்யக்கூடாது என யோசித்து 2020 இல் தொடங்கியதுதான் வீனா பாட்காஸ்ட்.  பொதுவாக, பொது இடங்களில் சில விஷயங்களைப் பேசக்கூடாது என நாம் நினைப்போம். சிலர் அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட விஷயங்களைத் தேடி தேடி பேசுகிறார்கள் இரு நண்பர்களும். வினுஷ்குமார் சென்னையில் இருக்கிறார். நவீன் ஜெர்மனியில் வாழ்கிறார். இணையத்தில் கலந்துகொண்டு பாட்காஸ்ட் நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்கள்.  வினுஷ்குமார், நவீன் பேசிய  இன்னும் யார் சார் சாதி பாக்குறா என்ற பாட்காஸ்டைக் கேட்டோம். அதில் வினுஷ்குமார், சாதி சார்ந்த தனது சொந்த அனுபவங்க

திரைப்படங்களின் தணிக்கையை கையில் எடுக்கும் மத்திய அரசு! - புதிய சூப்பர் சென்சார் விதிகள் அறிமுகம்

படம்
                        திரைப்படங்களுக்கான புதிய சட்டம் 2021       கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன . இந்த விதிகள் 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன . இதன்படி திரைப்படத் தணிக்கை அமைப்பு படத்தை திரையிடலாம் என குறிப்பிட்ட பிரிவில் படத்தை அனுமதித்தாலும் கூட அதனை திரும்ப சோதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது . இந்த சட்டம் பற்றி பார்ப்போம் . படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள் , காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு சென்சார் அமைப்பு சிலசமயங்களில் சான்றிதழ் தரமுடியாது என்று கூறி திரையிட அனுமதி மறுக்கும் . அந்த சமயங்களில் இதற்கான தலைமை அமைப்பான ட்ரிப்யூனலில் முறையிட்டால் பெரும்பாலும் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கிடைத்துவிடும் . மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பை கலைத்துவிட்டு , இனிமேல் நீதிமன்றங்களே படத்தை திரையிடலாமா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் என்று கூறிவிட்டது . இதனை திரைத்துறையினர் பலரும் இது சாத்தியமாக என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர் . புதிய விதிகள் உருவாக்கப்பட்டு

நிர்வாணக் காட்சிகளை இப்போது ஆட்சேபிப்பவர்களை விட வாவ் சொல்பவர்கள்தான் அதிகம்! - மிலிந்த் சோமன்

படம்
                      மிலிந்த் சோமன் திரைப்பட நடிகர் , மாடல் . நீங்கள் டிவியில் எ மவுத்புல் ஸ்கை என்ற தொடரில் நடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன . டிடி நேஷனலில் வெளியான முதல் ஆங்கிலத் தொடர் அது . இந்தியாவில் பொழுதுபோக்கு எப்படி மாறியுள்ளது என நினைக்கிறீர்கள் ? இன்று வாய்ப்புகளும் பெருகியுள்ளன . அதைப்போலவே ஓடிடி பிளாட்பாரங்களில் கதைகளை சுதந்திரமாக கூறுவதற்கான இடமும் உள்ளது . ராமாயணம் , மகாபாரதம் ஆகிய புராண கதைகளை தாண்டி இன்று புதிய கதைகள் வருகின்றன . பிரமாதமான புதிய நடிகர்களின் வருகையும் பொழுதுபோக்கு தளத்தை மாற்றியுள்ளது .    கடந்த ஆண்டில் நீங்கள் படித்த பிடித்தமான புத்தகம் ஒன்றைச் சொல்லுங்கள் . நான் உங்களுக்கு நான் எழுதிய மேட் இன் இந்தியா நூலை சொல்லுவேன் . நீங்கள் அண்மையில் கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தீர்கள் . இதற்கு என்னவிதமான எதிர்வினைகளை நீங்கள் எதிர்பார்த்தீர்கள் ? நான் சில மாதங்களுக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த விளம்பரம் ஒன்றின் நாளிதழ் பதிப்பை வெளியிட்டிருந்தேன் . அதில் நடித்த நானும் இன்னொருவரான மது சாப்

உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

படம்
            சசிதரூர் பிரபல எழுத்தாளர் , காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் . 2009 இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர் . அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ . நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார் . கேரளத்தை பூர்விகமாக கொண்டவர் , திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் .   வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள் , நாவல் , தத்து வம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார் . டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர் . விவாதிக்கின்றனர் . 2006 இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ . நா தலைவராக்க பரிந்துரைத்தது . ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை . 22 வயதில் ஐ . நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் , ஐ . நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார் . இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார் . 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல . நான் எடுத்த முடிவு சரிதா

நடிப்பை விட தனிப்பட்ட வாழ்க்கைக்காக அதிகம் பேசப்பட்ட ஆங்கிலப்பட நடிகர்! லியனார்டோ டிகாப்ரியோ

படம்
      டிகாப்ரியோ டிகாப்ரியோ டக்ளஸ் விட் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட லியனார்டோ டி காப்ரியோவின் வாழ்க்கைக் கதை. ஜெர்மனை மூதாதையர்களாக கொண்டவர் லியோ. அவரின் ஹிப்பி அப்பா, உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அம்மா என இருவருடனும் வந்து அமெரிக்காவில் லியோ எப்படி ஜெயித்தார் என்பதுதான்  நூலின் முக்கியமான பகுதி. பால்ய வயதில் லியோ பல்வேறு டிவி தொடர்களில் நடித்து சம்பாதித்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்துதான் கொஞ்சம் நல்ல சூழல் கொண்ட வீட்டுக்கு மாறுகிறார். அவரின் இயல்பு, பள்ளியில் நடந்துகொள்ளும் விதம், டிவி ஆடிஷன்கள் , அவரின் அப்பா பற்றிய லியோவின் உணர்வுகள் என  நிறைய விஷயங்களை பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானா லியோ பேசிய பதிவுகள் அனைத்தும் ஊடகங்கள் வந்தவைதான் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 அத்தியாயங்கள்.. குடும்பத்திற்கான வருமானமே லியோவின் நடிப்பு மூலம் கிடைக்கிறது. 1995க்குப் பிறகு லியோவின் வாழ்க்கை முறையே மாறுகிறது. டைட்டானிக் படம் வந்தபிறகு அவரின் சினிமா மார்க்கெட்டும் உயருகிறது. இந்த நூல் லியோவின் நடிப்பை மதிப்பிடுவதை விட ஆஸ்கர் விருதுக்கான் ஆசையை அதிகம் பேசியுள்ளத

வரும் வாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஆளுமைகள், தினங்கள்!

படம்
pixabay அகஸ்டோ போல் மார்ச் 16,1931 பிரேசில் நாட்டு நாடக கலைஞர்.  இடதுசாரி கருத்துகளைச் சொல்ல தியேட்டர் ஆஃப் தி ஆப்ரஸ்டு என்ற நாடக அமைப்பைத் தொடங்கினார். நாடக வடிவங்களைப் பற்றியும், தனது அரசியல் செயற்பாடு பற்றியும் நூல்களை எழுதியுள்ளார். தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16,1995 இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று போலியோ இல்லாத நாடாக இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. நோர்பட் இல்லியக்ஸ் மார்ச் 17, 1806 நோர்பட் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், வேதியியல் பொறியியலாளர். இவர், சர்க்கரை தொழில்துறைக்காக கண்டுபிடித்த மல்டிபிள் எஃபக்ட் எவாபெரேட்டர் இவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எகிப்து நாட்டின் தொன்மை வரலாறு பற்றிய ஆய்வையும் செய்து வந்தார். ரிச்சர்ட் பி ஸ்ட்ராங் மார்ச் 18, 1872 அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பிளேக், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள

தடை செய்யப்பட்ட நூல்களை படித்திருக்கிறீர்களா?

படம்
கீழ்க்காணும் நூல்களை அமெரிக்கன் லைஃப்ரி ஆஃப் காங்கிரஸ், பெற்றோர்கள் படிக்கலாம். குழந்தைகளுக்கு படிக்க பரிந்துரைக்க கூடாது என்று கூறியுள்ளது. அப்படிப்பட்ட சில நூல்களை பார்ப்போம். 'The Absolutely True Diary of a Part-Time Indian' இந்த நூல் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையைப் பேசுகிறது. அவரின் மீது நடத்தப்பட்ட இனவெறி வசைகள், வறுமை, குடிபோதை வாழ்க்கை, வன்முறை, பாலியல் வேட்கை ஆகியவற்றை பேசுகிற இந்த நூல் வெளியானபோது கடும் சர்ச்சைகளை சந்தித்தது. அதனாலேயே வெற்றியும் பெற்றது. 2007ஆம் ஆண்டு தேசிய புத்தகவிருதும், அடுத்த ஆண்டே சிறந்த இளைஞர் இலக்கிய விருதையும்  வென்று சாதனை படைத்தது. 'The Adventures of Huckleberry Finn' மார்க் ட்வைன் எழுதிய இந்நூல் முன்னணி எழுத்தாளர்களால் மிகச்சிறந்த படைப்பு என்று பேசப்பட்டது. ஆனால் வெளியானபோது இனவெறியை பேசியதால் சர்ச்சைக்குள்ளானது. ஆனாலும் வாசகர்கள் இதனை சரியாகப் புரிந்துகொண்டு அவரின் நய்யாண்டியை அடையாளம் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் 1885ஆம் ஆண்டு வெளியானது. நூலின் சிறப்பு, அமெரிக்கர்கள் தினசரி பேசும் எளிய ஆங்கிலம் கொண்டு உரையாடல்கள் இ

காதலும் வயதும் முட்டிக்கொண்டால்? - ஹார்ட்பீட் -2017

படம்
ஹார்ட்பீட் இயக்கம் துவர்கா ராஜா இசை தரண்குமார் ஒளிப்பதிவு பாலாஜி சுப்பிரமணியம் காதலும் வயசும் எப்போதும் ஒன்றாக இணைந்து பயணிப்பதில்லை. இங்கும் அதுதான் பிரச்னை. 18 வயது டீனேஜ் பெண்ணும், 25 வயது இளைஞனும் காதலித்தால் என்ன பிரச்னை உருவாகிறது  என்பதுதான் படம். ஆஹா படத்தில் தேவையில்லாமல் குத்துப்பாட்டு, ஆபாச காட்சிகள், மழையில் நனைவது என்பதெல்லாம் இல்லை. துருவா, வெண்பா இரண்டு பேர்களுமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமெடி என்பது தனியாக இல்லை. முழுக்க காதலும் வயதும் சார்ந்த விஷயங்களாகவே இருக்கிறது. ஐயையோ வயது சார்ந்த பிரச்னையாகவே அதனைப் பேசுகிறார்கள். பள்ளியில் காதல் என்பது சர்ச்சையாகும் என்பதால், டீனேஜ் பெண் வேலைக்குப் போனபிறகு காதலிப்பதாக காட்டுகிறார்கள். ஆனால் நாயகனின் அம்மா, தான் அவளின் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக பேசுகிறார். இதை எப்படி புரிந்துகொள்வது? முக்கியமான விஷயத்தை கவனமாக கையாண்ட இயக்குநருக்கு பாராட்டுகள். பள்ளியில் காதல் என்பது படிப்பில் பெண்களின் கவனத்தை  சிதறடிக்கும் விஷயம் என்பதால் அதனை பார்வையாளர்கள் ஆதரிப்பது கடினம். பேசவேண்டிய விஷயத்தை