இந்தியாவை தேங்கி கிடக்கிற, நோய் பிடித்த சமூகமாக மாற்றியதே இந்துமதம்தான்!
அரசை கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கம் இந்தியச்சமூகத்தில் கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்று தேடினாலும் ஆளும் வர்க்கத்தின் அளவு பத்து சதவீதம்தான் தேறும். இந்தியாவிற்கென நாடாளுமன்றம் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இயங்க முடியாது. இந்த ஆளும் வர்க்கம்தான் அரசை நடத்துகிறது. அரசு இவர்களை நடத்தவில்லை. அரசியலமைப்புச்சட்டம் சில விஷயங்களைக் கூறலாம். நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வரலாம். கேபினட் அமைச்சகம் முடிவுகளை எடுக்கலாம். அரசு கூட இறுதியாக ஏதேனும் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் ஆளும்வர்க்கத்திற்கு அந்த முடிவுகள் சட்டங்கள் பிடிக்காதபோது, அவை நடைமுறைக்கு வராது. எனவே, தலித்துகளை காக்கும் சட்டங்கள் அனைத்தும் காகித தாளில் மட்டுமே உள்ளது. அவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம், அவையெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக இல்லை. இப்பிரச்னையை எளிதாக கூறலாம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எந்த அரசும் இயங்க முடியாது. இதை எதிர்த்து யாரும் இயங்க முடியாது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை ஆட்சியை விட்டு அகற்றியது கூட இதே ஆளும...