இடுகைகள்

திருநங்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழிக்குப்பழி குணம் கொண்ட கான்ஸ்டபிளுக்கு சவால் விடும் தொடர் கொலைகாரர்! கூமன் - மலையாளம்

படம்
  கூமன் மலையாளம் இயக்கம் ஜீத்து ஜோசப் நடிப்பு – ஆசிஃப் அலி, ரமேஷ் திலக் தன்னை அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் கதை. காவல்துறையில் இயங்கும் பலரும் உடலில் ஒரு வித திமிருடன் திரிவார்கள். அனைத்து விவகாரங்களிலும் தங்களின் கருத்து முடிவாக இருக்கும் என நினைப்பவர்கள். இந்த நிலையில் இப்படி இருக்கும் நாயகனை (கிரி சங்கர்) சிலர். தேவையில்லாமல் பகைத்துக்கொண்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவன் அவர்களை தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்குகிறான். சாதாரண மனிதர்களுக்கு இப்படியென்றால்,  புதிதாக அலுவலகத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் ஹரிலால் (பாபுராஜ்) அவனை உதாசீனப்படுத்துகிறார். ஒருமுறை ஊரில் நடக்கும் கபாடி போட்டியில், அரசியல்வாதி ஒருவனை பழைய பகையில் பழிவாங்க நாயகன் நினைத்து அடிக்கிறான்.அ ப்போது இன்ஸ்பெக்டர் அவனைப் பிரித்துவிட நினைத்து தள்ளிவிட சேற்றில் விழுந்துவிடுகிறான் நாயகன். அதை ஊரே பார்த்து சிரிக்கிறது. வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறது. இதனால் இன்ஸ்பெக்டரின் மீது இருக்கும் கோபம், வன்மமாக மாறுகிறது. இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்கு நாயகன்

மக்களின் பிரச்னை பற்றி பேசி படம் எடுத்தால் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள்! - திவ்யபாரதி, ஆவணப்பட இயக்குநர்

படம்
              படைப்புகளை எதிர்த்து வழக்குகளை போடுகிறார்கள் ! கக்கூஸ் படம் எடுத்த திவ்யபாரதியை பற்றி படித்திரூப்பீர்கள் . அவர் இப்போது கீட்டோ நிறுவனத்தின் உதவியுடன் நிதி திரட்டி மாற்று திறானிகளை மையமாக வைத்து சாட்லா என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார் . வரவர ராவ் , சுதா பரத்வாஜ் , ஸ்டேன்சாமி ஆகியோர மக்கள் பிரச்னைக்காக போராடினாலும் அவர்களை அரசு எதிரிகளாகவே கருதுகிறது . பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது என ஆவேசப்படுகிறார் . க க்கூஸ் என்ற தனது ஆவணப்படுத்தில் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்தார் . அடுத்து ஒருத்தரும் வரலே என்ற படத்தில் ஓக்கி புயலில் அரசு எப்படி செயல்பட்டது , சாகர் மாலா திட்டத்தால் ஏற்படும் அபாயம் பற்றியும் விளக்கியிருந்தார் . 2017 இல் இவரின் க க்கூஸ் படம் வெளியானபோது , அரசு இவர் மீது சைபர் டெரரிசம் என்று வழக்குகளை பதிவு செய்த்து . அது மோசமான காலகட்டமாக இருந்தது . வெறும் டீசர் வெளியிட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள் என்று கூறுகிறார் . அம்பேத்கர் , பெரியார் , கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின் மீது நம்பிக்கை கொண்ட

மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 20! - புதிய நூலுக்கான அட்டைப்படம்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 20! மாற்றுப் பாலினத்தவர் வாழ நிறைய வழிகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்சரா ரெட்டி போன்று ஊடகங்களில் சாதிப்பவர்கள் உண்டு. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாற்றுப்பாலினத்தவர் என்று கூறவே இங்கு வெட்கப்படும் நிலை உள்ளது. வறுமையான சூழலில் இருந்து மேலேறி வருபவர்கள் மிகவும் தடுமாறுகிறார்கள். அரசு அளிக்கும் உதவிகள் பற்றிக்கூட கூறுவதற்கு இங்கு ஆட்கள் இல்லை. ஏனெனில் படித்தவர்கள் கூட ஓரினச்சேர்க்கையாளர் என்று ஒருவரைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று பேசுகிறார்கள். இந்த விவகாரம் என்னை பெரிதும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நூலில் உள்ளவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களின் வாழ்க்கை  அனைத்து அவமானங்களையும் சகித்து வந்ததுதான். வெறுத்து விபசாரம் பக்கம் செல்லாமல் பிறரின் உரிமைக்காகவும் உழைத்து வருகின்றனர். புகைப்படம், டிவி, சினிமா, ஃபேஷன் என பல்வேறு துறைகளிலும் மாற்றுப்பாலினத்தவருக்கு முன்மாதிரியாக உள்ளனர். தம்மைப்போன்ற பிறருக்காகவும் போராட்டத் தீப்பந்தத்தை கையில் ஏந்துவதற்கு இவர்கள் தயங்குவதில்லை.  இத