மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 20! - புதிய நூலுக்கான அட்டைப்படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 20!
மாற்றுப் பாலினத்தவர் வாழ நிறைய வழிகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்சரா ரெட்டி போன்று ஊடகங்களில் சாதிப்பவர்கள் உண்டு. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாற்றுப்பாலினத்தவர் என்று கூறவே இங்கு வெட்கப்படும் நிலை உள்ளது. வறுமையான சூழலில் இருந்து மேலேறி வருபவர்கள் மிகவும் தடுமாறுகிறார்கள். அரசு அளிக்கும் உதவிகள் பற்றிக்கூட கூறுவதற்கு இங்கு ஆட்கள் இல்லை. ஏனெனில் படித்தவர்கள் கூட ஓரினச்சேர்க்கையாளர் என்று ஒருவரைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று பேசுகிறார்கள். இந்த விவகாரம் என்னை பெரிதும் மனவேதனைக்கு உள்ளாக்கியது.
இந்த நூலில் உள்ளவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களின் வாழ்க்கை அனைத்து அவமானங்களையும் சகித்து வந்ததுதான். வெறுத்து விபசாரம் பக்கம் செல்லாமல் பிறரின் உரிமைக்காகவும் உழைத்து வருகின்றனர்.
புகைப்படம், டிவி, சினிமா, ஃபேஷன் என பல்வேறு துறைகளிலும் மாற்றுப்பாலினத்தவருக்கு முன்மாதிரியாக உள்ளனர். தம்மைப்போன்ற பிறருக்காகவும் போராட்டத் தீப்பந்தத்தை கையில் ஏந்துவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. இதே வலைப்பூவில் இருபது மாற்றுப்பாலின நபர்களை எழுதினேன். இதற்கான உந்துதலைத் தந்த தோழர் பாலபாரதி, அவுட் வலைத்தள ஆசிரியர் குழு, பிளாக்போஸ்ட் வலைத்தளம் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலுக்கான அட்டைப்படம் இதோ.
அட்டைப்பட உருவாக்கம்:
https://www.postermywall.com