ஒரு நாடு, பல மொழிகள்! - மொழியை நொறுக்கும் அரசியல்!




Image result for amitshah caricature
pinterest


தெரிஞ்சுக்கோ!

மொழித்தீ!


உள்துறை அமைச்சர் இந்தி மொழியை மாநிலங்கள் இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று இந்தி திவஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கிறார். மத்திய அரசு அமைச்சர்கள் ஆண்டுதோறும் இந்தி மொழி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்தான். ஆனால் இம்முறை அமித் ஷா உள்துறை அமைச்சராகி பங்கேற்று சர்ச்சைக்கு திரி கொளுத்தியிருக்கிறார்.

இந்தி என்றாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை அது தற்காலிகம்தான். சமஸ்கிருதத்தை இந்தியின் இடத்தில் பொருத்துவது அவர்களின் லட்சியம். அதற்கான அடிக்கல்லை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்பே நடத்தொடங்கிவிட்டனர். கல்வி விஷயத்தில் பாஜக அரசு ஏற்கனவே தன் கருத்துகளை நடவு செய்யத் தொடங்கிவிட்டது. வரலாற்றை திருத்தி தனக்கேற்றபடி மாற்றி எழுத தொடங்கிவிட்டனர். அதிகாரம் கையில் இருக்க கவலை என்ன? எனது சொல்லே  கட்டளை, அதுவே  சாசனம் என தினமொரு கட்டளை டெல்லியிலிருந்து வருகிறது.  நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை யாரும் விமர்சிக்காமலிருக்க ஏதேனும் ஒரு அறிவிப்பை வீசிக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு.

ஓகே. மொழி பற்றிய டேட்டா இதோ!


22 மொழிகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. 99 பட்டியலிடப்படாத மொழிகள் உண்டு. 14 மொழிகளை பத்து மில்லியனுக்கும் மேலான மக்கள் பேசுகிறார்கள். 1 மில்லியன் - பத்து லட்சம்.

இந்தியர்களில் 43 சதவீதப் பேர் இந்தி பேசுகின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை அறிக்கை. இதில் அடுத்தடுத்த இடங்களில் வங்காளம், தெலுங்கு, தமிழ் இடம்பெற்றிருக்கின்றன.


இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 197 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.


கல்வி அறிவில் கேரள மாநிலம் 93 சதவீதம் பெற்றுள்ளது. தோராயமாக 48 சதவீத பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்தது 5 ஆம் வகுப்பேனும் படித்துள்ளனர்.


நன்றி: இந்தியா டுடே