மூளையை அப்கிரேட் செய்ய முடியுமா?
pixabay |
மூளையின் திறன்களைப் பற்றி நாம் நிறைய பெருமை கொள்கிறோம். ஆனால் சிறு சிப்களில் அதிக தகவல்களை அடக்கி வைக்கத் தொடங்கிவிட்டோம். மேலும் கணினி அளவுக்கு கணக்குகளைப் போட்டு நம்மால் செயல்பட முடியவில்லை. அதுவே மனித மூளையின் முதல் தோல்வி.
இனிமேலும் பல்வேறு டெக் நிறுவனங்களின் ஆராய்ச்சி மனித மூளையை பல்வேறு துறை சார்ந்து வெல்வதாகவே இருக்கும். மூளையிலுள்ள தகவல்களை கணினியில் இணைப்பது பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அவற்றில் புதுவரவு எலன் மஸ்கின், நியூராலிங்க்.
1973 ஆம் ஆண்டு உலகில் முதன்முதலாக மனிதர்களின் மூளை -கணினி இடைமுகம் உருவாக்கப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலையைச் சேர்ந்த ஜாக்யூஸ் விடல் என்பவர் இதனை உருவாக்கினார். மூளையின் மின் துடிப்புகளை எலக்ட்ரோபாலோகிராம் கருவி மூலம் அறிந்து கணினியில் பதிவு செய்தார். அதனை இயங்க வைத்தார்.
1988 ஆம் ஆண்டு யூகோஸ்லேவியா ஆராய்ச்சியாளர்கள், இசிஜி சிக்னல்களை மூளையிடமிருந்து பெற்று, கணினியின் இணைப்பிலுள்ள ரோபோ ஒன்றை இயங்க வைத்தனர். கண்களை மூடவும் திறக்கவும் வைத்தனர். அவ்வளவேதான்.
1991 ஆம் ஆண்டு நூறு எலக்ட்ரோடுகளைக் கொண்ட கருவி ஒன்றை ரிச்சர்ட் நார்மன் கண்டுபிடித்தார். இது மூளையில் உள்ள மின்தூண்டல்களை பதிவு செய்தது அல்லது மின்தூண்டல்களை ஏற்படுத்தியது.
1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்டிஏ, பார்க்கின்சன் நோய் பாதிப்பைக் குறைக்க மூளையில் எலக்ட்ரோடுகளைப் பொருத்துவதற்கான அனுமதியை வழங்கியது.
2000 ஆம் ஆண்டில் ட்யூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குரங்கு ஒன்றின் மூளைத்தூண்டல்களை இடைமுகம் மூலம் சேகரித்தனர். அதன் மூலம் ரோபோ ஒன்றின் கைகளை இயக்க முயற்சித்தனர்.
2005 ஆம் ஆண்டு மேத்யூ நாகல் என்பவர், மூளையிலுள்ள தூண்டல்களை பதிவு செய்து அதன் மூலம் விளையாட்டுகளை விளையாடுவது, டிவியை இயக்குவது உள்ளிட்ட விஷயங்களை சைபர்கைனடிக்ஸ் நிறுவனத்திற்காக செய்தார்.
செயற்கைக் கரம் ஒன்றை வெற்றிகரமாக முதன்முதல் இயக்கிக் காட்டியது இவரின் மகத்தான வெற்றி.
2016 ஆம் ஆண்டு கைகள் செயலிழந்த மனிதரின் எண்ணம் மூலம் கருவிகளை இயக்கி சாதனை செய்தது பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம்.
2017 இல் எலன்மஸ்க், அறுவை சிகிச்சை செய்யுமளவு நுட்பமான விஷயங்களை செய்யுமளவு இயந்திரங்களை உருவாக்கியுள்ளார். இதனால் பல்வேறு மூளை இயக்க குறைபாடு தொடர்பான நோய்கள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
நன்றி: பிபிசி