பகடிக்கலைஞர்- கேரள கார்ட்டூனிஸ்ட் சுதீர் நாத்



Image result for cartoonist sudheer nath




கேரளத்திலுள்ள திரிக்காகரா எனும் கிராமத்தில் பிறந்த சிறுவனுக்கு  வரைவது என்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அதற்கான தூண்டுதல் வேண்டுமே? 1986 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள கேலிச்சித்திரக் கலைஞர் நாதம் உரையாற்றியதைக் கேட்டதும் சிறுவன் மனதில் இத்துறைதான் தனது எதிர்காலம் என்பது முடிவாகத் தோன்றியது.

நாதன்,  முதல்வர் கே.கருணாகரன் வரைந்த கேலிச்சித்திரத்தை எடுத்துச்சென்று அவரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். அதனை தன் வகுப்பில் காட்டி பெருமை கொண்டார். ஆனால் வகுப்பில் அச்சிறுவனே அதனை வரைந்ததாக நினைத்துக்கொண்டு பாராட்டினர். சரியோ தவறோ அந்த பாராட்டு அவரை நிறைய வரைய வைத்தது.

Image result for cartoonist sudheer nath


இன்று சுதீர் நாத், நிறைய கேலிச்சித்திரங்களை வரைவதோடு அதனைப் பற்றி பிறருக்கு வகுப்புகள் எடுக்கிறார். அடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுகிறார்.

சுதீர் நாத் என்று பெயரும் புகழும் பெற்றவருக்கு பதினைந்து வயதானபோது, அவரின் அம்மா, அவரை கார்ட்டூனிஸ்டான யேசுதாசனிடம் அழைத்துச்சென்றார். அவர்தான் சுதீருக்கு அனைத்து அடிப்படை விஷயங்களையும் கற்பித்தார்.

1987 ஆம் ஆண்டு சுதீர் வரைந்த அரசுக்கு எதிரான கார்ட்டூன்கள் மாநிலமெங்கும் அவரின் புகழைப் பரப்பின. பனிரெண்டு ஆண்டுகளாக தேஜாஸ் எனும் நாளிதழில் கார்ட்டூன்களை வரைந்தார் சுதீர். கார்ட்டூன் அகாடமியில் உறுப்பினரானவர், பல்வேறு நுட்பங்களை மூத்த கலைஞர்களிடம் கற்றுக்கொண்டார். வரைவது, புகழ்பெறுவது என்பதைக் கடந்து கார்ட்டூன்கள் பற்றிய கவனத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்துவதை முக்கியப்பணியாக செய்து வருகிறார் சுதீர்.


இவரது கார்ட்டூன்கள் அரீனா ஆஃப் லாஃப்டர், இந்திரப்பிரஸ்தம், வரையும் குறியும் ஆகிய நூல்களாக இவரது கார்ட்டூன்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கார்ட்டூன்களை நீங்கள் புன்னகையுடன் பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் சுதீர். நல்ல ஐடியாவை, குறைந்த வார்த்தைகளுடன் படமாக வெளிப்படுத்தவேண்டும் என்பதே சுதீர் கூற விரும்பும் கருத்து.

நன்றி- எக்ஸ்பிரஸ் - ஜிஸ் டாம்ஸ்






பிரபலமான இடுகைகள்