உடல்நலத்திற்கு குடல் நலம் மிக முக்கியம் - மேகன் ரோசி



Image result for dietician megan rossi




நேர்காணல்

மேகன் ரோசி, ஊட்டச்சத்து வல்லுநர், கிங் கல்லூரி லண்டன்

தம்பதிகள் நெருக்கமாக இருக்கும்போது முத்தமிட்டால் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும் என்கிறீர்களே?

நம்முடைய எச்சிலில் நிறைய பாக்டீரியாக்கள் உள்ளன.அவை முத்தமிடும்போது இணையரின் வாயிற்குள் செல்கிறது. இது அவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுகிறது. உடல்பருமன் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதுவே காரணம். எனவே தம்பதிகள் தம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.


நீங்கள் எப்படி வயிறு சார்ந்த உணவு வல்லுநர் ஆனீர்கள்.

என்னுடைய பாட்டி குடல் சார்ந்த புற்றுநோயால் காலமானார். தினசரி, சிகிச்சை பலனளிக்காமல் அவர் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டேன். பலரும் சிறுநீரகம், குடல் பாதிப்பு என இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதில்லை. எனவே நான் குடலிலுள்ள நுண்ணுயிரிகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன். இதன் விளைவாகவே  உணவு மீது ஆர்வம் கொண்ட நான், குடல் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.

ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் குழு கூட பதற்றம் கொண்டு அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் குடல் சார்ந்த நுண்ணுயிரி பாதிப்பு அவர்களுக்கு இருந்தது கண்டறியப்பட்டது.

மூளைக்கும் குடலுக்கு தொடர்பிருக்கிறது என்கிறீர்கள். உணவு மாற்றினால் பிரச்னை தீர்ந்து விடுமா?

30 தாவர உணவுகளை நீங்கள் தொடர்ச்சியாக உண்டால் குடலில் தோன்றும் பாக்டீரியாக்களால் எந்த பாதிப்பும் வராது. உங்கள் உடல் எடையும் கூட சரியாக இருக்கும். சிறுவிதைகள், கீரைகள் என எடுத்துக்கொண்டால் உங்கள் குடல் பாதிக்கப்படாது. நீங்களும் நலமாக இருக்கலாம்.

நீங்கள் கூறியபடி பார்த்தால் நாம் கழிவறையில் மலத்தைக் கூட கண்காணிக்கவேண்டுமே?

உங்கள் உடல் நலமாக இருக்க அதையும் கவனமாக செய்யவேண்டும்தான். காரணம், குடலிலுள்ள நுண்ணுயிரிகள் மூளையுடன் தொடர்பு கொண்டு தகவல்களை கடத்துகின்றன. இதுவே நோய்களுக்கு முக்கியக் காரணம். மேலும் ரத்த த்திலும் இந்த நுண்ணுயிரிகள் கலக்கின்றன. சரியான உணவுப்பழக்கமே உங்களை நோயிலிருந்து காக்கும்.

நன்றி: நியூ சயின்டிஸ்ட்