எலிப் படுகொலை! - பிரெஞ்சு காலனி தேச காமெடி!







வியட்நாம் தலைநகரான ஹனோய் அப்போது பிரெஞ்சு வசம் இருந்தது. பொதுவாக காலனி ஆதிக்க சக்திகளுக்கு, மக்களின் வரிப்பணத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடிப் பார்க்க எப்போதுமே ஆசை உண்டு. ஓஷோ சொன்ன கோழியின் சிறகுகளைப் பிடுங்கிப்போட்ட கதை உதாரணம்.

இங்கும் அப்படி ஒரு ஆட்சியாளர் என்ன செய்தார், தெரியுமா? நகரமயமாக்கலுக்கு ஆசைப்பட்டார். ஆனால் செயல்படுத்தியதில் சின்ன சிக்கல் ஏற்பட்டுவிட்டது. விளைவு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள்.

பால் டூமோர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அவரை வியட்நாமின் ஹனோய் நகருக்கு நிர்வாக அதிகாரியாக நியமித்தனர். நாகரிக நகருக்கு முதல்படி என்ன கழிவறையும் சாக்கடையும்தானே! ஆம் உடனே ஆட்களைத் திரட்டி பதினான்கு கி.மீ. நீளத்திற்கு சாக்கடை ஒன்றை பிரமாதமாகக் கட்டினார். நகரை பிரமாதமான உயரத்திற்கு உயர்த்திவிட்டதாக நினைத்தார் பால் டூமோர். அவருக்கு மான்ஸ்டர் வில்லனாக வந்தது, வேறு யாருமில்லை எலிகள்தான். சிறப்பான வாழிடமாக சாக்கடைக் குழாய்களைத் தேர்ந்தெடுத்தன. ஒரு கட்டத்தில் உணவுப்பிரச்னை எழ, அதுதான் மாம்ஸ் இருக்கிறார்களென நேரடியாக மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்தன. உணவுகளை ருசித்துத் தின்றன.

பச்சாவ் என மக்கள் அலற, கண்சிவந்தார் பால் டூமோர். உடனே தன் அரசு படையை அனுப்பி எலிகளை பிடிக்கச்சொன்னார். எலிகளின் இனப்பெருக்க வேகம், படைகளின் வேகத்தையும் மிஞ்சியதால் 20,114 எலிகளைக் கொன்று மூச்சு வாங்குவதற்குள்ளாகவே அடுத்த செட் எலிகள் ரெடியாயின. உடனே அரசு என்ன செய்யும்? ஆம் பொறுப்பு துறப்புதான். உடனே எலிகளைக் கொல்லும் திட்டப்பணியை மக்களிடமே வழங்கியது அரசு.

இறந்த எலிகளின் வால்களைக் கொண்டு வந்தால் வால் ஒன்றுக்கு ஒரு சென்ட் அளிப்போம் என தீர்க்கமாக உத்தரவிட்டார் பால். மக்கள் உடனே ஹே என துள்ளிக்குதித்து எலி வேட்டைக்கு கிளம்பினர். ஆனால் வியட்நாமியர்கள் காருண்யம் கொண்டவர்கள். எனவே எலியின் வாலை மட்டுமே கொண்டு வந்தனர். இதற்காக எலிகளைக் கொல்லவில்லை. அரசு பணம் கொடுக்கிறது. எலியைக் கொன்றுவிட்டால் பணம் கிடைக்காதே.! சிலர் சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியா என எலிகளைப் பண்ணையாக வளர்த்தனர்.

இந்த உண்மை புரிந்த அரசு உடனே எலிக்கு பணப்பரிசு திட்டத்தை நிறுத்தியது. அதற்குள் மிகவும் தாமதம் ஆகியிருந்தது. 1906 ஆம் ஆண்டில் பிளேக் நோய் வேகமாக பரவத் தொடங்கியிருந்தது. இருநூறுக்கும் அதிகமானவர்கள் வைகுண்ட பிராப்தி பெற்றார்கள். அனைத்திற்கும் எலிகள்தான் காரணம். பால் டூமோர் என்ன செய்வர்

ஸ்மார்ட் ஹனோய் திட்டத்தை வேறுவழியின்றி பிரேக் போட்டு நிறுத்திய பால், உடனே தட்கலில் ரயில் புக் செய்து சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். பின்னர் அவரின் செயல்பாடுகளை யாரும் பேசவில்லை. பிரான்ஸ் அதிபராகவும் சாதித்த பாலின் நாடு முழுக்க ஒரே வருமானவரித் திட்டம் முக்கியமானது. சிறந்த நிர்வாகி என்பதற்காக விருது கூட பெற்றிருக்கிறார்.

https://theculturetrip.com


பிரபலமான இடுகைகள்