உருளைக்கிழங்கே உணவு- பொருளாதார தாக்குதலில் ஈரான்!
pixabay |
ஈரானில் உணவு பரிதாபம்!
வளமான, போர்களைச் சந்திக்காத நாடுகளில் உருளைக்கிழங்கு என்பதற்கு பொருள், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல் மட்டுமே. ஆனால் வறுமை, சர்வாதிகாரம், பொருளாதாரத் தடை ஆகியவற்றைச் சந்திக்கும் நாடுகளுக்கு உருளைக்கிழங்குதான் உணவாதாரமே. எனவேதான் உடல்பருமனுக்கு உருளைக்கிழங்கு பெருமளவு இகழப்பட்டாலும், அதன் உற்பத்தியை குறைப்பதில்லை. காரணம், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
ஈரான் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக வெளிநாடுகளில் வாங்கி வந்த சோளம், அரிசி, பார்லி ஆகியவை அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அங்கு மக்களுக்கு உணவாதாரத்திற்கு உருளைக்கிழங்குதான் ஒரே வழி.
2009 ஆம் ஆண்டு பிரதமரான ஈரான் அதிபர் மஹ்மூத் ஆமடினேஜாட் ஆட்சியில் மக்கள் கடும் பிரச்னைகளைச் சந்தித்தனர். இதன் விளைவாக, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டும்படி, நமக்கு உருளைக்கிழங்கு வேண்டாம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அலறினர். ஏறத்தாழ உருளைக்கிழங்கு என்பதே அங்கு மறைந்து வந்த நேரத்தில் மீண்டும் அதனை மக்கள் நாட வேண்டிய சூழல் வந்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் 1.2 மில்லியன் டன் அரிசி, 1.3 மில்லியன் டன் பார்லி, 9.5 மில்லியன் டன் சோளம் ஆகியவற்றை ஈரான் இறக்குமதி செய்தது. இன்று இந்தப் பொருட்கள் அமெரிக்க அரசின் அச்சுறுத்தலாக் குறைந்து வருகின்றன.
அமெரிக்கா, சவுதி அரேபியா உடனான உரசல்களால் 2009 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தியை அரசு 20 சதவீதம் பெருக்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு 5 டன்களுக்கு மேல் உற்பத்தியை பெருக்கியிருந்தது. ஈரானின் சாகர்மகால், அசர்பைஜான், ஹமதான், கோரசான் ஆகிய இடங்களில் பெருமளவு உருளைக்கிழங்கு உற்பத்தி நடைபெறுகிறது. உருளைக்கிழங்கு தொடர்பான ஆராய்ச்சிகளும் இங்கு அரசு உதவியுடன் நடைபெறுகிறது.
கடந்த மார்ச்சில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட, உருளைக்கிழங்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டு, உள்நாட்டு விற்பனைக்கான முயற்சிகள் தொடங்கப்படன. ஈரான் உணவு வகைகளான தாடிக், குகு ஆகியவற்றுக்கு உருளைக்கிழங்கு முக்கியமான ஆதாரம். ஈரானியர்கள் உருளைக்கிழங்கு வகைகளை உற்பத்தி செய்து ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்று வந்தார்கள். 2017 முதல் விற்பனையும் கூட 12 சதவீத்திற்கு மேல் அதிகரித்து வந்தது. ஆனால், அமெரிக்காவின் தடை அனைத்து விஷயங்களையும் மாற்றி விட்டது. ஏனெனில் அமெரிக்காவில் கிடைத்த 2 டாலர்கள் விலை என்பது ஈரானில் 0.70 டாலர்கள் என்றுதான் கிடைக்கும்.
1800 களில் உருளைக்கிழங்கு பெர்சியாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, கறி வாங்க ரேஷனில் ஈரானியர்கள் நிற்கிறார்கள். ஈரானியர்கள் மாட்டிறைச்சியை அதிகம் உண்பவர்கள். தற்போது இதன் விலை அதிகரித்துள்ளதால், பலரும் உருளைக்கிழங்கை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். ஒருவகையில் கட்டாயமான சைவ உணவுக்கு மக்கள் பழகி வருகின்றன.
நன்றி: ozy ஆஸ்டின் போடெட்டி