இடுகைகள்

ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டில்லிக்கு தனது காமிக்ஸை விற்க வந்து டரியலான ஜப்பானியரின் கதை! - ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா 2011

படம்
  தனது காமிக்ஸ் புத்தகத்துடன் யுகிச்சி யமமாட்சு ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா 2011 ஆங்கில மொழிபெயர்ப்பு  குமார் சிவசுப்பிரமணியன் முதிர்ச்சியானவர்களுக்கு மட்டும் -18 + மாங்கா காமிக்ஸ் என்பதற்கான மார்க்கெட் என்பது உலகளவில் தற்போது உருவாகி வருகிறது. இப்படி ஒரு மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள ஜப்பான் கலைஞர் யுகிச்சி முயல்கிறார். அதற்காக இந்தியாவுக்கு வந்து படாதபாடு பட்டு தடுமாறுவதுதான் கிராபிக் நாவலின் மையம்.  ஜப்பானிய மொழி மட்டுமே தெரிந்த யுகிச்சி எப்படி அவருக்கு தொடர்பேயில்லாத இந்தியாவுக்கு வந்து காமிக்ஸை தயாரித்து விற்றார் என்பதுதான் கதை. இந்த கதைக்குள் ஏராளமான அவல நகைச்சுவை காட்சிகள் உள்ளன. குறிப்பாக வெளிநாட்டுக்காரன் என்றாலே பணம் நிறைய வைத்திருப்பான் என்று டீத்தூள், துணி, ஆட்டோவுக்கு அதிக பணம் என ஏமாற்றுவது நாவல் முழுக்க நடைபெறுகிறது. இதில் பாரபட்சமே கிடையாது.  இத்தனையும் சமாளித்து அவர் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். பின் செலவு கட்டுப்படியாகாமல் தனி அறை பார்க்கிறார். அதற்கு அவர் ஏஜெண்டுகளை தேடி செல்வதும் நடக்கும் காட்சிகளும் சிரிக்க வைப்பதோடு, இப்படியுமா நடக்கும் என அதேநேரம் எண்ண வைக்க