இடுகைகள்

தும்மல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைனோசர் காலத்து மூட்டைப்பூச்சி - உண்மையா? உடான்ஸா?

படம்
உண்மையா? உடான்ஸா? மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன!  உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குறிப்பிட்ட வகை

அதிக நீரை குடித்தால் இறக்கும் வாய்ப்புள்ளதா?

படம்
        more water       பதில் சொல்லுங்க ப்ரோ அதிக நீரை குடித்தால் இறக்கும் வாய்ப்புள்ளதா ? அதிகளவு நீரை குடிக்கும்போது உடலிலுள்ள எலக்ட்ரோலைட்ஸ்களின் அளவு அதன் எல்லைகளைக் கடந்து பாதிப்படையும் . நீரிலுள்ள சோடியம் உடலின் ரத்த த்தில் அதிகரிப்பது ஆபத்தானது . இதற்கு ஹைப்போநாட்ரிமியா என்று பெயர் . நீர் அதிகம் உட்கொள்ளப்பட்டால் வயிற்றுப்போக்கு , இதயம் செயலிழப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும் . மேலும் உடலிலுள்ள இயல்பான திரவச்சுரப்புகள் பாதிப்படையும் . நீர் பொதுவாக சிறுநீர் , வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது . அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று ஜெனிபர் ஸ்ட்ரேஞ் என்ற இருபத்தெட்டு வயது பெண்மணி இறந்து கிடந்தார் . மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான இவர் , ரேடியோவில் அறிவிக்கப்பட்ட போட்டியில் பங்கேற்று , அதிகளவு நீரைக் குடித்துவிட்டு சிறுநீர் கழிக்காமல் இருந்தார் . பொதுவாக நீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் இறப்புகள் குறைவு . அப்படியே ஏற்பட்டாலும் அது பல்வேறு டிவி ரேடியோ போட்டிகள் , பெற்றோர் குழந்தைகளை தண்டிப்பது , மாரத்தான் போட்டிகள் என்பதால் ஏற்படுகின்றன . நீரை அதிகள