நியூஸ்ரூம்: முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்களில் அதிகரித்துள்ள பாதரசம்!
நியூஸ்ரூம்! அட! புதிய பலம்! இந்திய அரசின் விமானப்படைக்கு போயிங் நிறுவனம் ஒப்பந்தப்படி 37 ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கியுள்ளது. 2015-16 ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனமான போயிங்குடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 22 AH-64E Apache, 15 CH-47 Chinook வகை ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு தயாரித்து வழங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர் பணிகளில் இந்திய அரசுக்கு உதவக்கூடிய திறன் பெற்றது சினூக் ஹெலிகாப்டர்கள். இவை இந்திய –சீன எல்லைப்பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. யுபிஐ ஐயையோ! அழகு க்ரீம் ஆபத்து! இணைய விற்பனைத் தளங்களில் விற்கப்படும் அழகுசாதன க்ரீம்களில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பாக்.கின் கோரி, ஹாங்காங்கைச்சேர்ந்த ஸ்மைல்பான் ஆகிய நிறுவனத்தின் க்ரீம்களில் அதிகளவு பாதரசம் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. Zmwg எனும் அமைப்பு, பாதரச அளவை ஒழிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் இறுதிக்குள் பல்வேறு நாடுகள் க்ரீம்களுக்கு தடைவிதிக்கும் வாய்ப்பு உள்ளது. ராய்ட்டர் அப்படியா? சாதனை முறியடிப்பு! அமெரிக்...