இடுகைகள்

அதிர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிர்ச்சிகரமான சம்பவமும், அதைப் பற்றிய நினைவுகளும்!

படம்
  அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியும், அதன் நினைவுகளும்  ஒரு அரசியல் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். இதை அறிந்தவர்கள் முதலில் அதிர்ச்சியடைவார்கள். அதேசமயம், அது சம்பந்தமாக செய்திகளை நாளிதழ்களில் தேடிப்படிப்பார்கள். அந்த சமயம் தான் செய்துகொண்டிருந்தோம். யாருடன் இருந்தோம். பேசினோம் என்பது கூட நினைவில் இருக்கும். அதாவது, பல்லாண்டுகள் கடந்தாலும் கூட அவர்களால் அந்த அதிர்ச்சியான சம்பவங்களை துல்லியமாக நினைவுகூரமுடியும். எப்படி, அந்த அதிர்ச்சியான சம்பவத்தை நினைவை திரும்பத் திரும்ப அவர்கள் நினைவுகூர்ந்துகொண்டே இருப்பதால்தான். இதை உளவியல் ஆய்வாளர் ரோஜர் ப்ரௌன், 'ஃபிளாஸ்பல்ப் மெமரிஸ்' என்று குறிப்பிட்டார்.  1963ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே மறக்காது. இதை தொடர்புபடுத்தி திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நூல்கள், தொலைக்காட்சி தொடர்கள் கூட தயாரிக்கப்பட்டன. கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய இருவரையும் கூட எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள்தான்.  சாதி, மத, மொழி வேறுபாடின்றி இருவரைய

அதிர்ச்சியால் ஒருவருக்கு தலைமுடி நரைத்துபோகலாம்! - உண்மையா? பொய்யா?

படம்
        1. ஒருவருக்கு திடீரென ஏற்படும் அதிர்ச்சியால் ஓரிரவில் முடி வெள்ளையாக வாய்ப்புள்ளது . ரியல் : இந்த ரீலுக்கான ஆதாரம் 1793 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த புரட்சியில் அடங்கியுள்ளது . அப்போது ராணி சிறைபிடிக்கப்பட்டார் . அடுத்தநாள் கில்லட்டினால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது . அப்போது , அவரின் தலைமுடி முழுவதும் வெள்ளிக்காசு போல நரைத்துப் போயிருந்தது . இதைக் காரணம் காட்டி அதிர்ச்சியால் தலைமுடி ஓரிரவில் நரைக்கலாம் என்கிறார்கள் . அது சாத்தியமல்ல . நம் உடலுக்கு வயதாகும்போது தலைமுடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான மெலனின் சுரப்பு குறைகிறது . இதனால்தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் சிலருக்கு ஏற்படுகிறது . இந்த எண்ணிக்கை அதிகரித்தால் , ஒருவரின் தலைமுடி முழுக்க வெள்ளையாகும் . இந்நிலைக்கு கனிடைஸ் சப்டிடா (Canities Subita) என்று பெயர் . மெலனின் , ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருளையும் உருவாக்குவதால் , முடியை வெளுத்துப்போகச்செய்வதில் அதன் பங்கும் உண்டு . ஆனால் இது ஓரிரவில் நடக்காது . 2. சாலை விபத்துகளை வாகனங்களிலுள்ள விளக்குகள் தடுக்கின்றன . ரியல் : உண்மை . பல்வேறு பருவ க

திருமணம் ஏற்படுத்திய அதிர்ச்சி! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 10 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக   இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இங்கு மருந்துகளை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வருமானம் பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது. செய்யும் வேலைக்கு மதிப்பான சம்பளம் கிடைக்கவில்லை என்று படுகிறது. திருமணம் பற்றி கேட்டிருந்தீர்கள். அது பற்றி எனக்கு எந்த யோசனையும், சிந்தனையும் இல்லை. நீங்கள் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சகோதரரின் திருமணம் நடந்தவிதமே அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான செலவுகளை நாமே ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உங்களுக்கு சகோதரரிடம் நிறைய பாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்பதை நான் நம்பவில்லை. இந்த வகையில் ஒப்பிட்டால் எனக்கு சில நண்பர்களே உள்ளனர். சாதி சார்ந்த உறவுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. சகோதரருக்கு நீங்கள் உதவுவது பற்றி எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது. அது உங்கள் விருப்பம். சுதந்திரமும் கூட. நன்றி! ச.அன்பரசு 7.5.16

அதிர்ச்சி ஏற்பட்டால் உடல் நடுங்குகிறதா?

படம்
பயம் ஏற்படும்போது உடல் நடுங்குவது ஏன்? பொதுவாக உருட்டுக்கட்டை போன்ற நாயைப் பார்க்கும்போது, எக்ஸ்எல் சைஸ் ஆன்டியைப் பார்க்கும்போது, ஆண்டு இறுதியில் இன்கிரிமெண்டாக போடும் ஆயிரம் ரூபாயைப் பார்க்கும்போது உடல் நடுங்கும், நாக்கு குழறும். காரணம், மூளையிலுள்ள அமிக்தலா எனும் பகுதியில் மேற்சொன்ன அசம்பாவிதங்கள், ஆச்சரியங்கள் நடக்கும்போது, அட்ரினலின் சுரக்கத் தொடங்கும். பயம், சண்டை இரண்டுக்குமான டபுள் டூட்டி ஹார்மோன் இதுவே. சூழலைப் பொறுத்து ஆச்சரியப்படவோ, ஆவேசப்படவோ காரணம் இந்த சுரப்பிதான். அட்ரினலின் அளவு அதிகரிக்கும் போது உடலின் தசைகளால் நடுக்கமுறுவதைத் தடுக்க முடியாது. மெல்ல இதயத்துடிப்பை அமைதியாக்க நான்கைந்து முறை மூச்சை இழுத்து விட்டால் எதிர்பார்ப்பு, அதிர்ச்சி குறைந்து உடல் நார்மல் மோடுக்கு வரும். தகவல், படம்: பிபிசி