இடுகைகள்

கியூபா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்ட்ரா சோனிக் அலைகள் ஆயுதமா?

படம்
அல்ட்ரா சோனிக் அலைகள் ஆயுதமா? திருவிழாக்கள், மணவிழா ஆகியவற்றில் உங்களை டக்கென ஈர்ப்பது,  அந்த விழாவை ஊருக்குச் சொல்லும் பாடல்கள்தானே!  தூரத்தில் இருக்கும்போது ரசிக்க வைக்கும் பாடல்களின் இசையை, ஸ்பீக்கர்களின் அருகில் இருக்கும் போது எழும் அதிர்வுகளால் அதை ரசிக்க முடியாது. அதே காரணம்தான் இங்கு செய்தியாகி இருக்கிறது.  சீனா மற்றும் கியூபாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வினோதமான குற்றச்சாட்டை அந்நாட்டு அரசுகள் மீது வைத்தனர். சோனிக் அலை ஆயுதங்களால், எங்களைத் தாக்குகிறார்கள் என்பதுதான் அது. தற்போது ஜமா (Jama) என்ற ஆய்விதழ், பாதிக்கப்பட்டோரின் மூளைகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு இல்லையென கியூபா அரசு, அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஒலி அலைகள்  ஒருவரைத் தாக்குமா? குறிப்பிட்ட அலைவரிசை வேகத்தில் செலுத்தினால் முடியும்தான். ஆனால் அவை மூளையிலுள்ள நியூரான்களை பாதித்து ஒருவரின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது.  ஒலி அலைகளில் ஒன்றான அல்ட்ரா சோனிக் அலைகளை மனிதர்கள் 20 முதல்