இடுகைகள்

மார்க்கெட்டுக்கு புதுசு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்கெட்டுக்கு புதுசு! - மே 2019

படம்
ஹூவெய் மேட் புக் புரோ 2019 சீனர்கள் எதையும் மட்டமாக கொடுப்பார்கள், தரமில்லாமல் இருக்கும் என்பதை இந்த மேட் புக் புரோ உடைத்திருக்கிறது. எட்டாம் தலைமுறை இன்டெலின் ஐ7 புரோசஸர், ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ் 250 கிராபிக்ஸ், பார்டர் இல்லாத திரை என அத்தனை அம்சங்களும் பிரமாதம். மேக் கணினியில் இல்லாத பல அம்சங்கள் இதில் உண்டு. அது என்ன என்று கேட்கிறீர்களா? அதை நீங்கள் வாங்கிப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக ஒன்று கணினியிலிருந்து உங்கள் போனுக்கு எளிதாக கோப்புகளை மாற்றிக்கொள்ளலாம். விலை 25 ஆயிரத்திலிருந்து தொடக்கம். டேக் ஹையர் ஸ்மார்ட் வாட்ச் ஒவ்வொரு டெக் கம்பெனிகளும் ஸ்மார்ட் வாட்ச் வெளியிட டேக் ஹையர் மட்டும் காலாட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்களா?  கோல்ஃப் மைதானத்தின் டிசைனில் உள்ள வாட்ச் அவ்வளவு அழகாக இருக்கிறது. ஊரிலுள்ள கோல்ப் மைதானங்களை அடையாளம் காட்டுகிற வாட்ச் இது. ஆனால் கோல்ஃப் மைதானத்தில் அடியெடுத்து வைக்கவே கொள்ளைக் காசு தேவை! லெய்கா க்யூ 2 கம்பெனி இம்முறை என்னென்ன விஷயங்களை பொருத்தியிருக்கிறார்கள் என்று  கூறப்போவதில்லை. குறைந்த ஒளியிலும் பிரமாதமான படங

சந்தையில் அசத்தும் டெக் சமாச்சாரங்கள்

படம்
டெக் பொருட்கள்!  DJI Mavic Zoom 2 திரைப்பட ஒளிப்பதிவாளர்களை எளிதில் கவரும் ட்ரோன் ஜூம் கேமரா. 31 நிமிடங்கள் பேட்டரி சக்தியில் செயல்படும் ட்ரோன் விமானம் 72 கி.மீ வேகத்தில் பறந்து படமெடுக்கும் திறன் கொண்டது.  விலை ரூ. 79,490. Apple Watch Series 4 இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் இசிஜி மானிட்டர் வசதி, ஆப்பிள் வாட்ச்சை மதிப்பற்ற கேட்ஜெட் ஆக்கியுள்ளது. வேகமான புரோசஸர், ஸ்லிம் வடிவமைப்பு எவரையும் வசீகரிக்கும். விலை ரூ.27,943 Google Home Hub வீட்டை ஸ்மார்ட் வீடாக்க கூகுள் ஹோம் ஹப் உதவும். நெட்ஃபிளிக்ஸ், யூட்யூபில் உள்ள வீடியோக்களைக் காண்பதற்கான வசதிகளும் இதில் உண்டு. கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் இதனை இயக்கலாம். விலை ரூ. 9,034  Xbox Adaptive Controller கம்ப்யூட்டர் கேம் விளையாடுபவர்களிலும் மாற்றுத்திறனாளிகள் உண்டு. ஸ்பெஷலாக அவர்களுக்கென உருவாக்கிய எக்ஸ் பாக்ஸின் கன்சோல் . எக்ஸ்பாக்ஸ் 1, விண்டோஸ் 10 ஆகியவற்றில் செயல்படும் இக்கருவி கையாள எளிதாக பெரிய D-Pad பட்டன்கள், ஜாய்ஸ்டிக்குகளை இணைக்கும் போர்ட்களைக் கொண்டுள்ளது. ரூ.6,928

புது கான்செப்ட் பொருட்கள்!

படம்
கான்செப்ட் புதுசு! Feher ACH-1 கார்பன் இழைகளால் உருவான உலகின் முதல் ஏர்கண்டிஷனர் ஹெல்மெட். 12 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் குறைக்கும் தயாரிப்பாளர் ஸ்டீவ் ஃபெஹர் கூறுகிறார். எடை 1.450 கி.கி. ஏ.சி இயங்க பேட்டரியும் உண்டு. Hera streetbike அமெரிக்காவைச் சேர்ந்த கர்டிஸ் மோட்டார் சைக்கிள்ஸிலிருந்து வரும் v-8 பேட்டரியில் இயங்கும் மின் பைக், ஹெரா. 66 இன்ச் வீல்பேஸில் இ-ட்வின் எஞ்சின்களோடு 2020 ஆம் ஆண்டு சாலைகளில் உங்களை சுமந்துசெல்லும். Infiniti's Concept 10 இன்ஃபினிட்டி நிறுவனத்தின் ஒற்றை சீட் கொண்ட இ-கார். பெட்ரோல் மூலம் கார் பேட்டரியை சார்ஜ் செய்யும் வசதிகொண்ட கார். nail-dispensing hammer நகத்தில் சுத்தியலடி வாங்காமல் ஆணியடிக்க சரியான சாய்ஸ் இதுவே. 3டி பிளாஸ்டிக் பாகங்கள் கொண்ட சுத்தியலில் ஆணிகளை உள்ளே லோடு செய்து ஸ்டேப்லர் போல ஆணிகளை மரத்தில் துளையிட்டு இறக்கவேண்டியதுதான்.    

உதடுகளை பயன்படுத்தி என்ன செய்யலாம்?

படம்
உதடுகளே சாவி ! பயணமே லட்சியமாய் வண்டியில் போய்க்கொண்டிருக்க டேஷ் போர்டில் உருளும் தண்ணீர்பாட்டிலை எடுத்து குடிக்கத்தோன்றும் . முகத்திலும் , உடையிலும் நீர் சிந்த எப்படி குடிப்பீர்கள் ? அதற்காகத்தான் Lyd நிறுவனம் உதடுகள் வைத்தால் பாட்டில் திறக்கும் வகையில் தண்ணீர் பாட்டிலை சென்சார் பிளஸ் பேட்டரி சக்தியுடன் தயாரித்துள்ளது . தம்ஸ்அப் ஸ்டைலில் ஒற்றைக் கையில் பிடித்து நீர் அருந்தலாம் . ஒரு துளி நீர் கார் சீட்களில் சிந்தாது . இனி பயணிக்கும்போது , ஜாக்கிங் போகும்போது வேகத்தை குறைக்காமல் நீர் பருகி பிறரை மலைக்க வைக்கலாம் . உதடுகள் ஒட்டும்வரை பாட்டில் திறந்து நீர்வரும் . உதடுகளை அகற்றினால் அடுத்தநொடி பாட்டில் சென்சார் உதவியுடன் அலிபாபா குகையாய் மூடிக்கொள்ளும் . 503 மி . லி மற்றும் 384 மி . லி அளவில் ஸ்டீலில் 79 டாலர்களுக்கு நவம்பர் முதல் சந்தையில் வாங்கலாம் .

ஆல் ஸ்க்ரீன் போன்- லெனோவா மாயாஜாலம்

படம்
லெனோவாவின் புதுமை ! லெனோவாவின் துணைத்தலைவர் சாங்செங் , சமூகவலைதளத்தில் பகிர்ந்த புதிய போன் ஏறத்தாழ ஐபோன் எக்ஸின் ஆல் ஸ்க்ரீன் என்பதை அடியொற்றி உருவாகியுள்ளது . இப்போனில் 95 சதவிகிதம் திரைதான் . லெனோவா இசட் 5, பற்றிய டீசரைத்தான் சாங்செங் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் . இதில் பதினெட்டு காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன . சீனாவைச் சேர்ந்த லெனோவா , 2.91 பில்லியன் டாலர்கள் செலவில் மோட்டரோலாவை கூகுளிடமிருந்து வாங்கி ஹூவாய் , ஜியோமி , விவோ , ஆப்போ ஆகிய போன் நிறுவனங்களை முந்தி நின்றாலும் ஹிட் போன்கள் லிஸ்டில் இன்னும் தடுமாறியே வருகிறது . இசட் 5 போனில் செல்ஃபி கேமரா எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பது முக்கிய கேள்வி . ஜியோமியின் மி மிக்ஸில் கேமராவை இயக்க கீழுள்ள பட்டனை அழுத்தலாம் . 

அமேஸான் கூகுளுக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் புதிய வரவு!

படம்
  ஃபேஸ்புக்கின் ஸ்மார்ட் ்ஸ்பீக்கர் ! ஃபேஸ்புக் விரைவில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்பதுதான் டெக் கிசுகிசு . Portal என பெயரிடப்பட்டுள்ள லேப்டாப் சைசில் 15.6 இன்ச் அளவில் உருவாகியுள்ளது . அமேஸானின் எகோ போல என புரிந்துகொள்ளுங்கள் . ஃபேஸ்புக் பிரைவசி சார்ந்த விசாரணைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் ஸ்பீக்கர்களை பலரும் வாங்குவார்களா என்ற டவுட்டும் உள்ளது . கூகுளின் ஹோம் , அமேஸானின் எகோ ஆகியவை இன்று மார்க்கெட்டை கலக்கினாலும் இதற்கான ஆராய்ச்சியை முன்னதாக அவர்கள் தொடங்கிவிட்டனர் . குரல் வழியாக தகவல் சொல்லும் இந்த உதவியாளர்களுக்கு ஃபேஸ்புக்கின் ஏஐ புரோகிராமான எம் உதவி புரியவிருக்கிறது . ஸ்மார்ட் ஸ்பீக்கரிலுள்ள மெசஞ்சர் மூலம் நண்பர்களிடம் அளவில்லாத அரட்டை அடிக்கலாம் . அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் இந்த ஸ்பீக்கர் உதவியாளர்கள் விரைவில் விற்பனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .