உத்தர்காண்ட் இடம்பெயர்தல் - கடவுளின் பூமியில் மனிதர்களுக்கு இடமில்லை!
கடவுளின் பூமியில் மனிதர்களுக்கு இடமில்லை 2000ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி உத்தர்காண்ட் மாநிலம் உருவானது. அதை உருவாக்கியபோது ஒன்றியத்தில் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். தொடக்கத்தில் மாநிலத்திற்கு உத்தராஞ்சல் என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் உத்தர்காண்ட் என மாற்றப்பட்டது. காரணம், பெயர் வைத்தவர்களுக்கே தெரியும். இப்படி பெயர் மாற்றியதால் மாநிலம் முன்னேறிவிட்டதா என்றால் கிடையது. இந்த மாநிலத்திலுள்ள மக்கள் தொடர்ச்சியாக சமவெளிக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். கடவுளின் பூமி என வலதுசாரி இந்து கட்சிகள் கூறி கூப்பாடு போட்டாலும் நிலைமை பெரிதாக மாறவில்லை. வாய்ப்பேச்சு வயிற்றிலுள்ள பசித்தீயை அணைக்க உதவாது அல்லவா? அந்த யதார்த்தம் அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை. மக்களுக்கு புரிந்ததால் தொடர்ச்சியாக அங்கிருந்து பிழைக்க வெளியேறி வருகிறார்கள். கல்வி, மருத்துவ வசதிகள் மிக சொற்பமாக உள்ள மாநிலம். இந்த நிலையில் வேலைவாய்ப்புகளும் கூட கிடையாது என்ற நிலையில் மக்கள் எப்படி அங்கு பிழைத்திருப்பார்கள்? காங்கிரஸ், வலதுசாரி மதவாதகட்சி என இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் மக்கள் வேலையின்றி வெளி ம...