இடுகைகள்

பட்டியலினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் தங்கள் உரிமைக்காக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை - ஏஞ்செலிகா அரிபம்

படம்
        எழுத்தாளர் ஏஞ்செலிகா அரிபம் இவர், அண்மையில் பிஃப்டீன் என்ற நூலை ஆகாஈ் சத்தியவாலியோடு இணைந்துஎழுதி வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். பெண்கள் அரசியலில் பங்கு பெற்று பாலின பாகுபாடு, இனவெறி ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன? சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்த பெண் என்ற வகையில், அன்னி மஸ்கரின், பேகம் அய்ஸாஸ் ரசூல், தக்சாயணி வேலாயுதன் ஆகியோரின் போராட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். ஆனால் இன்று அவர்களைப் போல தேசிய அரசியலில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. இன்றைய சூழலில் பாலின பாகுபாடு, இனவெறி தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. சின்கி, சோமெயின், மோமோஸ் என பட்டப்பெயரிட்டு என்னை இழிவுபடுத்திவருகின்றனர். எதற்கு நீ அரசியலுக்கு வந்தாய், உன்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் கடைகளில் விற்பனை பெண்களாக, பரிசாரகர்களாக சிறப்பாக பணியாற்றுகிறார்களே என்ற பாகுபாடான கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன்.   இங்கு ஆண்களே பெண்களுக்கான வேலைகளை உருவாக்குகிறார்கள். அதை செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பெண்கள், தங்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என குரலுயர்த்தி உரிம...

ஆதிதிராவிடர்களுக்கு நிதி செலவிடாத அமைச்சர்கள்!

படம்
கருப்பு இந்தியா! பிக்சாபே ஆண்டுதோறும் ஆதிதிராவிடர்களுக்கு இரண்டு முதல் இருபது சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு உண்டு. ஆனால் இதனை மக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன இந்திய அரசிலுள்ள 41 அமைச்சகங்களில் கிராம மேம்பாட்டுத்துறை மட்டுமே இதில் பாஸ் மார்க் வாங்கியுள்ளது. அமைச்சகங்கள் ஆதிதிராவிடர்களுக்கென அளிக்கப்பட்ட நிதியை பொது திட்டங்களுக்கு செலவழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. 50-60 சதவீத அமைச்சகங்கள் இம்முறையில்தான் செயற்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை சமக்ரா சிக்ஷா எனும் உணவுத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தியுள்ளன. கேள்விகளை எழுப்பினால் உடனே இந்த நிதி திட்டமிட்டு எஸ்சி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டுமென அரசு வலியுறுத்தவில்லை. எனவே நிதி குறைவாக உள்ள திட்டங்களுக்கு இந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர். இதே காரணத்தை பிற சாதிகளுக்கு அரசு அதிகாரிகள் செய்வார்களா? கேள்வி எழுப்பியபின்னும் திமிரோடு இப்படி பேச முடியுமா? என நாமே நினைத்து மனதில் சொல்லிப் பார்க்கவேண்டும். 2019 -2020 க...