இடுகைகள்

உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாராளவாத நன்மை,தீமை

படம்
புதிய தாராளவாதத்தின் எதிர்காலம் (சுருக்கம்) --- ### 1. புதிய தாராளவாதத்தின் நெருக்கடி நிலை இந்த நூல் முழுவதும் நாம் பார்த்தது போல், புதிய தாராளவாதம் பல முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறது: - **சமத்துவமின்மை** அதிகரித்து வருகிறது - பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் மாறுகின்றனர். - **சுற்றுச்சூழல் பிரச்சினைகள்** - காலநிலை மாற்றம் போன்ற வெளிப்புற விளைவுகளை சந்தையால் சமாளிக்க முடியாது. - **நிதி நெருக்கடிகள்** - 2008 போன்ற நெருக்கடிகள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. - **வெறுப்பு மற்றும் தேசியவாதத்தின் எழுச்சி** - மக்கள் புதிய தாராளவாத உயரடுக்குகளுக்கு எதிராக கிளர்ந்தெழுகின்றனர். இந்த நெருக்கடிகள் அனைத்தும் புதிய தாராளவாதத்தின் அடிப்படைக் குறைபாடுகளிலிருந்து உருவாகின்றன. --- ### 2. புதிய தாராளவாதத்தின் அடிப்படைக் குறைபாடுகள் **முதல் குறைபாடு: வெளிப்புற விளைவுகளை சமாளிக்க இயலாமை** சந்தை என்பது வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான பரிவர்த்தனை மட்டுமே. ஆனால் பல பொருளாதார நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்கின்றன - உதாரணமாக, ஒரு தொழிற்சாலை புகையை வெளியிடும்போத...

சீனாவின் ஏஐ ஆய்வு

# சூ லான்: சீனாவின் AI பொறுப்பும் உலகளாவிய நடவடிக்கையும் ## முக்கிய கருத்துகள் **AI-க்கான சீனாவின் அணுகுமுறை:** - AI மீது சீன மக்கள் மிகவும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர், ஐரோப்பா-அமெரிக்காவில் எதிர்மறைப் பார்வை நிலவுகிறது - முந்தைய தொழிற்புரட்சிகளை சீனா நேரடியாக அனுபவிக்கவில்லை; அந்த தொழில்நுட்பங்கள் முதிர்ந்த நிலையில் வந்தன - இப்போது சீனா AI-யில் முன்னணியில் இருப்பதால், பாதையை ஆராயும் பொறுப்பு உள்ளது **AI அபாயங்கள் - மூன்று வகைகள்:** 1. தீங்கிழைக்கும் பயன்பாடு அல்லது தவறான பயன்பாடு 2. கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் (மிகவும் கவலைக்குரியது) 3. முறையான அபாயம் - சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் AI-யின் தாக்கம் **உலகளாவிய ஆளுகை:** - முன்னெச்சரிக்கை அவசியம்; புதிய பிரச்சினைகளுக்கு பழைய அனுபவங்கள் உதவாது - இன்று தொழில்நுட்பம் "சுனாமி" போல் விரைவாக வருகிறது, பல தசாப்தங்கள் அல்ல - மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கு, மனித படைப்பாற்றலும் ஆர்வமும் பாதுகாக்கப்பட வேண்டும் **சீனாவின் பங்கு:** - AI மேம்பாட்டை வழிநடத்த செயலூக்கமான அணுகுமுறை - தேசிய நிபுணர் குழு மற்றும் சட்டங்கள் மூலம் ...

சீனாவின் தன்னாட்சி

ரென் சியாவ்: சர்வதேச உறவுகளின் ஒரு சீனக் கோட்பாடு, சீனாவின் சொந்த நிபந்தனைகளில் கட்சியின் முதன்மையான கோட்பாட்டு இதழில் எழுதும் சர்வதேச உறவுகள் பேராசிரியர், "சர்வதேச உறவுக் கோட்பாடு" என்பது மேற்கத்திய சர்வதேச உறவுக் கோட்பாட்டிற்கு இணையானதாக கருதப்படக்கூடாது என்கிறார். ஷு யியாங் மற்றும் ஜியா யுசுவான் ஆகஸ்ட் 17 --- --- "தன்னாட்சி அறிவு அமைப்பை" (自主知识体系) உருவாக்குவது சீனாவில் தத்துவம் மற்றும் சமூக அறிவியலுக்கான ஷி ஜின்பிங்கின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலை 2016 ஆம் ஆண்டில் தத்துவம் மற்றும் சமூக அறிவியல் குறித்த அவரது முக்கிய உரையில் காணலாம், அதில் அவர் "சீனப் பண்புகளுடன்" கூடிய துறைகளை மேம்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 2022 ஆம் ஆண்டில் ரென்மின் பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தின் போது அவர் இந்த நோக்கத்தை மேலும் வெளிப்படையாக்கினார், சீனப் பண்புகளுடன் தத்துவம் மற்றும் சமூக அறிவியலின் வளர்ச்சியை துரிதப்படுத்துவது "இறுதியில் சீனாவின் சொந்த தன்னாட்சி அறிவு அமைப்பைக் கட்டமைப்பதிலேயே முடிகிறது" என்று அறிவித்தார். அப்ப...

வேற்றுகிரகவாசி

# அந்தப் பெரும அமைதி: நாம் ஏன் இன்னும் வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்கவில்லை? --- ## அறிமுகம்: ஃபெர்மியின் கேள்வி 1950 ஆம் ஆண்டு, லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்திற்கு விஜயம் செய்தபோது, மன்ஹாட்டன் திட்டத்தின் கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான என்ரிகோ ஃபெர்மி, மற்ற இயற்பியலாளர்களுடன் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டுகள் பற்றிய உரையாடல் நடந்தது. அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில், ஃபெர்மி திடீரென கேட்டார்: "எல்லோரும் எங்கே?" - அல்லது, மற்றொரு பங்கேற்பாளர் நினைவுகூர்ந்தபடி, "எல்லோரும் எங்கே இருக்கிறார்கள் என்று நீங்கள் ஒருபோதும் யோசிப்பதில்லையா?" வேற்றுகிரகவாசிகள் இருந்தால், வேறுவார்த்தையில் சொன்னால், நாம் ஏன் அவர்களை ஒருபோதும் சந்தித்ததில்லை? இந்த நிகழ்வு புகழ்பெற்றதாக மாறியது, வேற்றுகிரக வாழ்க்கை தத்துவ ஊகங்களின் தலைப்பிலிருந்து ஒரு தீவிர அறிவியல் பிரச்சினையாக மாறிய தருணத்தைக் குறித்தது. பல நூற்றாண்டுகளாக, சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர், ஆனால் மற்றொரு கிரகத்துடன் தொடர்புகொள்வது சாத்தியமில்லாததால், நாம் ஒருபோதும் உறுத...

நாளைய நாயகர்கள் - கார்டியன் நாளிதழ் தொகுப்பு

 நாளைய நாயகர்கள்  பெண்களுக்கான அரசியல் பங்கேற்பு உரிமை - எம்பாம்பரா உகாண்டா நாட்டில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், போட்டியிடுபவர் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முசெவானி. அவர் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்கள் கிடையாது. ஒரே ஒரு பெண் மட்டுமே, தன் உடல், பாலினம் மீதான அவதூறுகள், திட்டமிட்ட கேலி கிண்டல் ஆகியவற்றைக் கடந்து போட்டியிடுகிறார். அவர்தான் நம்முடைய நாயகர். வழக்குரைஞர் எம்பாம்பரா. உகாண்டா நாட்டில் அரசியல் என்பது முழுக்க ஆண்களுக்கானது. அங்கு முசெவானிக்கு எதிராக போட்டியிடுபவர்கள் பலரும் ஆண்கள்தான். மொத்தம் எட்டுப்பேர். இதில் எம்பாம்பரா மட்டும்தான் பெண். எனவே, அவரை அரசியலில் முன்னேற பிற அரசியல்வாதிகளோடு உடலுறவு கொண்டார் என வதந்திகளை ஊடகங்கள் வழியாக இழிவான பிறவிகள் பரப்பி வருகிறார்கள். இதெல்லாம் எம்பாம்பராவை பாதிக்காமல் இல்லை. ஆனால், அவர்தான் அந்த நாட்டிலுள்ள பெண்களுக்கான முன்னோடி தலைவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதை வலியுறுத்தி போராடி வருகிறார். பெண்களை உறுப்பினர்களாக கொண்ட கட்ச...

உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

படம்
  உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர்.  இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.  எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது.  இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...

அதிகம் பயணம் செய்யாத நூல்களின் வழியாக உலகம் சுற்றிய தந்தையின் கதை! - மகனின் நினைவஞ்சலி

 அப்பாவின் லிஸ்ட்  என்னுடைய அப்பா, எப்போதும் பட்டியலை உருவாக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 539 நூல்களை வாசித்திருந்தார். ஞாயிறுதோறும் அவர் பார்த்த புக்நோட் நிகழ்ச்சியின் எபிசோடுகளை ஏழாண்டுகளாக குறிப்பு எடுத்து எழுதி வைத்திருந்தார். இந்த வகையில் 322 நிகழ்ச்சிகள் வருகின்றன.  தினசரி செய்யவேண்டிய வேலைகள் பற்றியும், தனது சிறிய குளிர்பதனப் பெட்டியில் வாங்கி வைக்கவேண்டிய குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் பற்றியும் கூட பட்டியல் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் இறந்துபோன அதிகாலை ஐந்து மணி வரைகூட படிக்கும் நாற்காலி அருகே இருந்து சிறிய நோட்டில் குறிப்புகளை எழுதி வைப்பதை கடைபிடித்து வந்தார். அவர் மறைந்தபிறகே அவருடைய பட்டியல் நோட்டுகளை அடையாளம் கண்டு எடுத்தேன்.  அப்பா, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். மசாசூசெட்சிலுள்ள லோவல் எனும் இடத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா, என்னுடைய தாத்தா, தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருடைய கொள்ளுத்தாத்தா, அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர். கம்பளி ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்பா, சாதுரி...

உண்மையை கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை!

படம்
  எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஜே கிருஷ்ணமூர்த்தி இந்த நூலில் கேள்வி பதில் வடிவில் ஏராளமான விஷயங்களை ஜே கே பகிர்ந்திருக்கிறார். அனைத்துமே புதுமையான சிந்தனைகள்தான். அவர் எதையும் உடனே நம்பு என்று கூறவில்லை. யோசியுங்கள். விசாரணை செய்யுங்கள். நீங்களே உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார். நூலில் அதிகம் பேசியுள்ளது கல்வி முறைகளைப் பற்றித்தான். அதற்கு காரணம், பெரும்பாலான கேள்விகளைக் கேட்டது அவர் நடத்திவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இப்படியான கேள்விகளை அவர்கள் கேட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. ஜே கே கல்வியை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாகவே பார்க்கிறார். தொழிலை பழகுவது, அதில் பணம் சம்பாதிப்பது, மணம் செய்துகொள்வது என்பதைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் விளக்கமாகவும் பேசவில்லை. காரணம், படித்து, மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்தால் அடுத்து நடப்பது திருமணம்தான். வாழ்க்கையை விசாரணை செய்து அறிந்துகொண்டு வாழ்க்கையை நடத்தக்கூறுகிறார் ஜே கே. மற்றபடி அவர் குறிப்பிட்ட லட்சியம், நோக்கம், ஒழுங்கு என்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு வார இதழ்களில் எழுதும...

மக்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை குற்றப்பங்காளிகளாக்கும் சூப்பர் ஆப்!

படம்
  விஷ்ஷர்  சீன தொடர்  12 எபிசோடுகள் போனில் தானாகவே வந்து அமரும் விஷ்ஷர் ஆப்பில், உங்கள் ஆசைகளைக் கூறினால் அது நிறைவேற்றப்படும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் ஒரு வேலையை நீங்கள் செய்யவேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆசையை நிறைவேற்ற கோரிக்கை அனுப்பமுடியும். இப்படி மக்களின் பேராசையைத் தூண்டும் ஆப்பின் பின்னணி, அதிலுள்ள மனிதர்களின் நோக்கம் பற்றி பத்திரிகையாளர் ஆராய்ந்து கண்டுபிடித்து தடுக்கிறார்.  பனிரெண்டு எபிசோடுகளே நீளம் என்று சொல்லுமளவு பாத்திரங்களின் நடிப்பு எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் நா டு என்ற பாத்திரத்தில் வரும் பத்திரிகையாளர் தோற்றம், நடிப்பு என அனைத்துமே மிகையாக இருக்கிறது. வயதானவர் போல காட்ட முகத்தில் தாடியை நடவு செய்து இருக்கிறார்கள். அது அவருக்கு ஒட்டவே இல்லை. அவரின் பாத்திரம் கடைசிவரை குழப்பமானதாகவே இருக்கிறது. நேர்மையானவரா, சந்தர்ப்பவாதியா, புத்திசாலியா என ஏதும் புரிவதில்லை.  கற்பனையான ஒரு நகரை காண்பிக்கிறார்கள். அந்த நகரை முப்பது நாட்களில் அழிப்பதுதான் திட்டம். அதற்காக விஷ்ஷர் ஆப் வருகிறது. இந்த ஆப், மக்களின் ஆசையை நிறைவேற்றி வைத்து பதிலுக்கு அவர்களை...

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசி...

உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!

படம்
  மில்லினியம் அல்செமிஸ்ட் மாங்கா காமிக்ஸ் 100-- பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு  செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம்.  அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சா...