இடுகைகள்

ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  கேலி, கிண்டல்களைத் தடுக்கும் மாணவி! ஹரியாணாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அனுஷ்கா ஜோலி. இவர் பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது பள்ளி மாணவியை,   சக வகுப்பு மாணவர்கள் பள்ளி நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததை அனுஷ்காவால் மறக்கவே முடியாது. இதனால்  பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றவே ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் ( 'Anti Bullying Squad ABS)என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய டிஜிட்டல்  தீர்வு மூலம் 100 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த வலைத்தளத்திற்கான  ஆதரவையும் உதவியையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள்,  தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.  அனுஷ்கா, எட்டாவது படிக்கும்போதே கவச் (Kavach) எனும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதில், மாணவர், மாணவிக்கு நடந்த கேலி, கிண்டல் புகாரை பெயர் தெரிவிக்காமல் புகாராக பதிவு செய்யலாம். இதன் மூலம் பள்ளியில் உள்ள ஆலோசகர்கள் உடனே பாதிக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற