இடுகைகள்

பனி உருகுவது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ