இடுகைகள்

துல்கர் சல்மான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

படம்
  ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை  கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு  ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம்  மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.  மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை உள்ளது.  ஆனால் மௌனாவுக்

காப்பீடு பணத்திற்காக கொலை செய்யும் ஜெகஜ்ஜால குற்றவாளி! - குருப்பு - ஸ்ரீநாத் ராஜேந்திரன்

படம்
  குருப்பு மலையாளம் துல்கர் சல்மான் பணத்திற்காக ஆசைப்படும் ஒருவனின் குற்றத்தடங்களைப் பற்றிய விவரிப்புதான் மையக்கதை.  கேரளத்தில் நடைபெற்ற முக்கியமான கொலைக்குற்றத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நடந்த சம்பவத்திற்கு வருத்தப்படவேண்டுமா என்பதை தொடர்புடையவர்கள்தான் சொல்லவேண்டும். படத்தில் நாயகன் தனது திறமையைப் பயன்படுத்தி குற்றங்களின் உச்சிக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருக்க படம் நிறைவடைகிறது.  கோபாலகிருஷ்ணன் என்பவரைப் பற்றி அவரது பெற்றோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் படம் கேரளத்தில் தொடங்குகிறது. அப்படியே கோபாலகிருஷ்ணன் பற்றி நோக்கி நகர்கிறது. பிறரை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டி வைப்பதில் ஆர்வம் கொண்டவன், விமானப் படைப் பிரிவில் பயிற்சிக்கு செல்கிறான். ஆனால் அவனது பணம் சம்பாதிக்கும் வேகத்திற்கு விமானப்படை பயிற்சியும் வேலையும் கசப்பாக இருக்கிறது. அங்குதான் பீட்டர் என்ற நண்பன் கிடைக்கிறான். அவனுக்கும் வெளியில் உள்ள அழகைக் காட்டுகிறான். ஆனால் தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை மறந்தும் கூட சொல்வதில்லை.  கோபாலகிருஷ்ணன் யார் என அவனது நண்பர்கள், மனைவி, சுற்றம் என பலரும் பல்வேறு கருத்துகள

தன்னைதானே உணரவைக்கும் ஒரு நெடும் பயணம்! - கார்வான்

படம்
              கார்வான் துல்கர் சல்மான் பெங்களூருவில் வேலை செய்பவர் . புகைப்படம் எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்ள நினைப்பவரின் எண்ணத்திற்கு அவரின் அப்பா சம்மதிப்பதில்லை . இதனால் வேண்டாவெறுப்பாக ஐடி கம்பெனி ஒன்றுக்கு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் . அப்போது அவரின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது . அதனை கார்கோ நிறுவனம் ஒன்றில் அனுப்பி வைக்கிறார்கள் . ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது . துல்கரின் அப்பாவுக்கு பதிலாக கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலை அனுப்பிவிடுகிறார்கள் . இவரின் அப்பா உடல் கொச்சிக்கு மாற்றி அனுப்பப்படுகிறது . இப்படி செல்லும்போது இவர்களிடம் உள்ள உடலுக்கு சொந்தக்காரரான தாஹிரா என்ற பெண்மணியின் மகள் , ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள் . அவளையும் அழைத்துச்செல்லும்படி நேருகிறது . இதன்படி வேன் ஓட்டுநரான சௌகத் , துல்கர் , தான்யா என மூவரின் பயணம் தொடங்குகிறது . இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே அப்பாவினால் பாதிக்கப்பட்டவர்கள் , ஒருவருக்கு அப்பா கொடுமைக்காரர் , இன்னொருவருக்கு புரியாத புதிர் , இன்னொருவருக்கு அப்பாவைப் பார்க்கவ

கிழிந்த பட்டம் போல பறக்கும் காதல் கதை! - காதல் இது காதல்

படம்
       காதல் இது காதல்  அழகப்பன்   மலையாளத்தில் பட்டம் போலே என்ற பெயரில் வெளியான படம். தமிழில் காதல் இது காதல் என காதல் பேசியிருக்கிறது.    படத்தில் தொடக்கமும் முடிவும் ஒன்றுபோலவ இருக்கவேண்டும் என நினைத்திருப்பதைத் தாண்டி படத்தில் எதுவும் இயல்பாகவே இல்லை.  ஐயர் குடும்பத்து பையன் கார்த்திக்குக்கும், கிறிஸ்துவக் குடும்பத்து பையன் மன்னிக்கவும் பெண் ரியாவுக்கும் வரும் காதலும், ஈகோவும் இன்னபிற பஞ்சாயத்துகளும்தான் படத்தின் கதை.  எஞ்சினியரிங் படித்துவிட்டு அதற்கு தொடர்பில்லாத ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பை படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறார் கார்த்திக். அதைப்போலேவே ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைதேடி கொண்டிருக்கிறாள் ரியா. இருவருக்கும் மனதிற்கு பிடித்திருக்கிறது. எனவே கல்யாணம் செய்துகொண்டு தனியாக வாழ்வோம் என கிளம்புகிறார்கள். வீட்டில் கலவரம் ஆகிறது. ஊட்டியில் சொகுசு ஹோட்டலில் தங்கும் கார்த்திக் ரியா ஜோடிக்கு பணம் பிரச்னையாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு ஊர் வந்து சேர்கிறார்கள்.   கார்த்திக் ரோசாரியோ என்ற கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். ட