ஆப்பிரிக்காவில் அடிப்படை கட்டமைப்பிற்கு உதவி வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனா!
ஆப்பிரிக்காவை நவீனமயமாக்கும் சீனா! உங்கள் நண்பரோடு செல்லும் பாதையை பகிர்ந்துகொள்ளுங்கள் என்று ஆப்பிரிக்க பழமொழி ஒன்றுண்டு. யார் நம்புகிறார்களோ இல்லையோ சீனா அதை நம்புகிறது. சீனாவும், ஆப்பிரிக்காவும் பரஸ்பர நலன்களுக்காக இணைந்தே பயணிக்கின்றன. அண்மையில் சீனா, ஆப்பிரிக்காவுக்கான ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. இதில் ஐம்பது ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். 1970ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஆப்பிரிக்காவின் தான்சானியா, ஜாம்பியா நாடுகளுக்கு இடையிலான ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வந்தனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரயில்பாதை பணியில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மொத்தம் எழுபது சீன தொழிலாளர்கள், பொறியாளர்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கென நினைவுத்தூண்களை தான்சானியாவில் எழுப்பி உள்ளனர். 1,860 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதையை சீனா, ஆப்பிரிக்காவில் உருவாக்கியுள்ளது. அப்பாதை இரு நாடுகளின் நல்லுறவுக்கான சாட்சியாக உள்ளது. சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கார்ப் நிறுவனம், நைஜீரியாவில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் இஸ்ஸா பாத்திமா அப்லோ...