உளவு பார்க்கும் விலங்குகள் - பயிற்சி கொடுக்கும் அமெரிக்கா!




watching kevin hart GIF
giphy


தெரிஞ்சுக்கோ!

விலங்குகளை உளவு பார்க்க பயன்படுத்துவது தொன்மைக் காலத்திலிருந்து நடைபெற்று வருகிற சங்கதி. மனிதர்கள் என்றால் உடனே போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆனால் புறா, கிளி, மீன் என்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நஷ்டம் குறைவு. எனவே, உளவு பார்க்க விலங்குகளை அனைத்து நாட்டு ராணுவங்களும் பயிற்றுவிக்கின்றன. ஐஎஸ் தீவிரவாதி தலைவரையும் இம்முறையில் உளவு பார்த்து நாயை விட்டு கண்டறிந்தது அமெரிக்கப்படை. அண்மையில் பெலுகா திமிங்கலம் நார்வேயில் பிடிபட்டது. அதில் செயின் பீட்டர்ஸ்பர்க்கின் சொத்து என எழுதப்பட்டிருந்தது. அனைவரும் ரஷ்யாவை குற்றம் சாட்ட, எங்களுக்கும் அந்த மீனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என காசை வெட்டிப்போட்டது போல ரஷ்யா பேசியது.


டேட்டா

அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஸ்பாவார் அமைப்பு,  85க்கும் மேற்பட்ட டால்பின் மீன்களை உளவு பார்க்க பயிற்றுவித்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு 50 கடற்சிங்கங்களை - வால்ரஸ்  கட்டுப்படுத்தி வருகிறது.


பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியா எல்லைக்குள் 4.5 கி.மீ. பறந்து வந்த புறாவை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். எப்போதும் போல பாகிஸ்தானுக்கு பத்திரிகை வழியாக எச்சரிக்கை விடுத்தனர்.


2011ஆம் ஆண்டு அமெரிக்கப்படையினர் 600 நாய்களை வளர்த்தனர். எதற்கு தெரியுமா? அவர்களே காசு கொடுத்து வளர்த்துவிட்ட தீவிரவாத தலைவர் பின்லேடனைக் கண்டுபிடிக்கத்தான்.


நன்றி - க்வார்ட்ஸ்