ஆபாசப்பட நாயகன் லேக்- திருடுவதில் சூரன் இணைந்து செய்த கொலைகள்!
அசுரகுலம்
லியோனார்டு லேக் - சார்லஸ் என்ஜி
எனக்கு பெண்களோடு விளையாடு பிடிக்கும். எனக்கு தேவைப்படும் போது அவர்களைப் பயன்படுத்திக்கொள்வேன். அதேசமயம் எனக்கு போரடித்தால் அவர்களை கூண்டில் அடைத்து வைப்பேன். அதுவும் கூட சலிப்பு தந்தால் அவர்களை என் கண்பார்வையிலிருந்து அகற்றுவேன். முடிந்தவரை என் வாழ்க்கையிலிருந்தும் கூட ------
இப்படி சொன்னவர்தான் லேக்.
தன் வீடியோ டேப்பில் மனதில் இருந்தவற்றை உடைத்து பேசியிருந்தார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1945ஆம் ஆண்டு அக்.29 அன்று பிறந்தவர், லேக். சிறுவயதில் அனைத்து அமெரிக்க குடும்பங்களிலும் நடக்கும் சங்கடங்கள் அவருக்கும் நடந்தன. குடும்பம் பிளவுபட்டது. அப்பா, அம்மா திசைக்கு ஒருவராக பிரிய பாட்டியை தஞ்சமடைந்தார் லேக். அப்போதே தன் சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை பார்ப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அதுவும் போக கிடைத்த நேரத்தில் தவளை, பல்லி ஆகிய உயிரிகளை வேதிப்பொருட்கள் கொண்ட கலவையில் முக்கி கொன்று அதனைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்.
1965ஆம்ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் பணிக்குச் சேர்ந்தார். ராடார் கருவியை இயக்கும் ஆபரேட்டர் பணி. அங்குதான் இவருக்கு ஆளுமை பிளவு பாதிப்பு இருக்கிறதென கண்டுபிடித்தனர். சிகிச்சைக்கு அனுப்பினர். திரும்பவும் வந்து பணியாற்றினார். ஆனாலும் அவருக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. வியட்நாம் போரிலும் பணியாற்றியவர் இவர். அங்கிருந்து திரும்பி வந்து கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் படிப்பு ஏறவில்லை. அப்போது ஹிப்பி கலாசாரம் அங்கு பிரபலமாக இருந்தது. அதில் இணைந்து ஜாலியாக கஞ்சா இழுத்துக்கொண்டு சுற்றினார். ஆனால் கடவுள் கொடுத்து அனுப்பிய உறுப்புகளை துரு ஏற விடலாமா? ஆம் கல்யாணம் செய்ய யோசித்தார்.
கிளாராலைன் பிளாசஸ் என்ற 25 வயது ஆசிரியை ஒருவரை மணந்தார். லேக், பாண்டேஜ் வகை பார்னோகிராபியில் பேரார்வம் கொண்டவர். மனைவியை இதற்காக படுத்தி எடுத்தவர். ஒருகட்டத்தில் அந்த படங்களை பார்ப்பதை அதில் நடித்தால் என்ன என்று தோன்ற சிறப்பான ஆபாசப்பட நடிகராக வலம் வந்தார். ஆக்சன் கிங் அர்ஜூனின் எனர்ஜியோடு பெண்களோடு குஸ்தி போட்டு குத்தியவர், தன் மனைவியையும் தொழிலுக்கு கொண்டு வந்தார். லேக்கின் செக்ஸ் பேன்டசிகளுக்கு அவரது மனைவி கிளாராலைனால் ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே விவாகரத்து செய்துவிட்டு ஓடியே விட்டார். மற்றொரு மனைவிக்கும் இதே கதிதான்.
சார்லஸ் என்ஜி
ஹாங்காங் நாட்டு ஆள். தந்தை தொழிலதிபர். ஊருக்கு உத்தமர் என்றாலும் வீட்டில் மகனை பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தினார். இதனால் மகனுக்கு படிப்பு ஏறவில்லை. தற்காப்பு கலைகளை கற்ற சார்லஸ், அங்கும் இங்கும் திருடத் தொடங்கி அதில் ருசி கண்டார். பள்ளியில் மாணவர்களின் பொருட்களை ஆட்டையப் போட போலீஸ் கேசானது. இதனால் இங்கிலாந்து மகனை பேக் செய்து உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தார். அங்கும் களவு செய்து தந்தையின் கனவை குலைத்தார். இதனால் அவரை ஹாங்காங் திரும்பி அனுப்பி விட்டனர். சார்லஸின் புகழ் பரவத்தொடங்கியபோது அவரின் வயது 15.
பின் அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைக்க அவரின் தந்தை முயன்றார். அங்கு சென்றவருக்கு முதல் செமஸ்டர் தாண்டி படிக்க முடியவில்லை. அங்கிருந்து விலகியவர், பதினோராயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்களை வேலை பார்த்த கடையிலிருந்து தேட்டை போட்டார். விடுவார்களா? 14 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தார்கள். போடா வென்றுகளா.. திட்டிவிட்டு தப்பித்து ஓடும்போதுதான் லேக்கை வழியில் சந்தித்தார். பேசினார்கள். பின்னர்தான் இணைந்த கைகளாகி அமெரிக்காவில் 25 பேர்களை கொன்று போட்டார்கள். கொலைக்கூட்டணி இப்படித்தான் உருவானது.
1982ஆம் ஆண்டு இருவரின் கொலைவேட்டைகளும் வெளிவந்தன. சார்லஸால் சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடும் ருசியை விட முடியவில்லை. இதனால் லேக், சார்லஸ் இருவரும் வெளியே காரில் வந்தனர். சார்லஸ் திருடிக்கொண்டிருக்க லேக் காரில் இருந்தார். சார்லஸ் திருடி மாட்டிக்கொண்டார். லேக், காரில் இருக்க லைசென்ஸை போலீஸ் கேட்டது. அவர் சிம்பிளாக ராபின் என்பவருடையதை எடுத்து கொடுத்தார். அது அவர் கொலை செய்த ஆள். இருவரின் வயதும் ஒத்துப்போகாமல் இருக்க, லேக் மாட்டிக்கொண்டார். ஆனால் சிம்பிளாக மானஸ்தன் வேலையைச் செய்தார். போலீசிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவர்கள் கொடுத்த நீரில் சயனைடு கலந்து குடித்து உடனே கோமாவுக்கு சென்றுவிட்டார். சார்லஸ் வசமாக மாட்டிக்கொண்டார். லேக் நான்கு நாட்கள் கழித்து இறந்துவிட்டார்.
கொலை வரலாறு
பெண்கள்தான் குறி. குடும்பமாக கொன்றால் கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு பெண்களை பதுங்கு குழிக்கு கூட்டி வருவார்கள். அங்கு பெண்ணை திகட்ட திகட்ட வல்லுறவு செய்து அதனை வீடியோ டேப்பாக்குவார்கள். பின்னர். அவளை கொன்று அந்த இடத்திலேயே புதைப்பார்கள். ரகசிய அறைகள் இரண்டு இருந்தன. ஒன்றில் வல்லுறவு சமாச்சாரங்களை செய்வது மற்றொன்றில் ரசித்து ரசித்து வெட்டிக்கொல்வது போன்ற வேலைகளை செய்வது. அனைத்திலும் லேக்தான் முன்னோடி என்றார் சார்லஸ். நான் உடலை டிஸ்போஸ் செய்தேன். அவ்வளவுதான் என்றார். தற்போது மரண தண்டனைக்காக காத்திருக்கிறார் சார்லஸ்.
தொகுப்பு - ஷான் ஜூனியர்
நன்றி - கில்லர்ஸ் புக்
கிரிமினல் மைண்ட்