போதை மருந்துகளைச் சாப்பிட்டால் என்னாகும்?
போதை மருந்துகளைச் சாப்பிட்டால் கண்களுக்கு விநோத காட்சிகள் தெரியும் என்கிறார்களே. அது உண்மையா?
எனக்கு தெரிந்த நாளிதழ் பொறுப்பாசிரியர் சினிமா வட்டாரத் தொடர்பு கொண்டவர். நான் எல்எஸ்டி கூட பயன்படுத்திவிட்டேன் என மாஸ் என்ட்ரி கொடுத்து டயலாக் பேசினார். போதைப்பொருட்களை சாதாரமாக சாப்பிடும்போது மூளையிலுள்ள செரடோனின் போன்ற சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும். இதன்விளைவாக மகிழ்ச்சியான காற்றில் பறப்பது போன்ற எண்ணம் உருவாகும். மூளையிலுள்ள தகவல்தொடர்புகளுக்கு நியூரான்கள்தான் பொறுப்பு. அவற்றின் செயல்பாடுகளை போதைப்பொருட்கள் தளர்த்தி விலக்கும். இதனால்தான் இந்த ஆட்களுக்கு அந்நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. மூன்றாவது கண் திறந்தது போல மிதமிஞ்சிய உற்சாகத்துடன் திகழ்வார்கள்.
இதனாலேயே மனக்கோளாறுகளைக் கொண்டவர்களின் மூளைக்கொதிப்பை அடக்க தூக்க மருந்துகளை மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. கற்றல் குறைபாடு கொண்டவர்களும் இதேபோல்தான். அவர்களுக்கு கண்களை மூடித் தூங்கத் தெரியாது. உடலின் மொத்த ஆற்றலும் காலியானால் மட்டுமே பேட்டரி தீர்ந்த ரோபோ கணக்காக ஓய்வாவார்கள்.
நன்றி - பிபிசி