அமெரிக்கா உலகப் பிரச்னைகளில் தலையிடவேண்டும்!
அகதிகளை கௌரவமாக நடத்துவதில் கவனம் தேவை
அயர்லாந்து அமெரிக்கரான சமந்தா பவர் எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர். இவர், ஐ.நாவில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். இவர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அவரின் பயணம், பணிகள் பற்றிப் பேசினோம்
உங்களது சிறுவயது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. உங்களது இன்றைய வாழ்க்கையில் அந்த அனுபவங்கள் செல்வாக்கு செலுத்துகிறதா?
நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு 9 வயது. எனது தம்பிக்கு வயது 5. என் அப்பா, தீவிரமான குடிநோய்க்கு அடிமையாகி இருந்தார். சூழல் எப்படியிருக்கும்? நான் அச்சூழலை மாற்ற நிறைய போராடினேன். குரல் இல்லாதவர்களுக்கு போராடும் எண்ணம் அன்றிலிருந்தே இருக்கிறது.
நீங்கள் அமெரிக்க ராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகளை தீவிரமாக விமர்சித்திருக்கிறீர்கள். மனிதர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அதனைக் குறித்திருக்கிறீர்கள்.
நான் என் நூலில் எழுதியது நீங்கள் கேட்டதற்கு மாறானது. அமெரிக்கா உலகப்பிரச்னைகளில் தலையிடாமல் தள்ளியிருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். பாரிஸ் ஒப்பந்தம், அணு ஆயுத ஒப்பந்தம், எபோலா நோய் தடுப்பு போன்றவற்றில் அமெரிக்க திறம்பட செயலாற்றுவது முக்கியம். அமெரிக்கா தன் போர் முயற்சிகளில் வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளிடம் பெரும் தோல்வியைச் சந்தித்த து. ராணுவத்தை விட அமெரிக்க அரசே அங்கு சிறப்பான உறவுகளை ஏற்படுத்த முடியும்.
நன்றி – டைம்ஸ் – 23.12.19
விக்ரம் ஜட்சி.