கூகுள் 2019 - சிறந்த ஆப்ஸ்கள் இதோ!




Related image
மீஸோ ஆப்




2019ஆம் ஆண்டு இறுதியில் உள்ளோம். இந்த நேரத்தில் அறுபது ஆப்ஸ்களுக்கு மேல் நம் போனில் வைத்திருப்போம். அதில் உருப்படியான ஆப்ஸ் உண்டா என ஆராய வேண்டிய நேரம் இது. கூகுள் தன்னுடைய கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் தரவிறக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில....


அப்லோ - ablo

இந்த ஆப் எதிர் பதிப்பக மொழிபெயர்ப்பாளர் போல கொடுத்ததை அப்படியே மொழிபெயர்க்கிறது. இதன் விளைவு என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களோடு கூட நீங்கள் சம்சாரிக்க, எழுத, அவர்கள் சொன்ன கல்வெட்டு வாக்கியங்களை படிக்க முடியும். அத்தனைக்குமான விஷயங்களை இந்த ஆப்பே செய்கிறது.

Boosted

இந்த ஆப் ஆபீஸ் நேரத்தில் ஒழுங்காக வேலை பார்க்கிறீர்களா என்று உங்களுக்கு சொல்லும். இதனால் கவனம் சிதறி இமெயில் செக் செய்து, சினிமா விகடன் தளத்திலேயே குடியிருக்கும் ஆட்கள் தம் தவறை எளிதாக உணர்ந்து திருந்த முடியும். வருஷக்கடைசி இல்லையா, இதையே புத்தாண்டு சபதமாக எழுதிக்கூட வைத்துக்கொள்ளலாம்.


Ok credit

இது பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளுக்கானது. வரவு செலவு ஆகியவற்றை இதில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இணையத்தில் உள்ள பதிவேடு இது. இதன்மூலம் என்னென்ன செலவு செய்தீர்கள், கஃபே பிரஷ்ஷில் அக்கவுண்ட் வைத்து ஐஸ்க்ரீம் தின்றது, சேட்டன் கடையில் ஜி பே செய்து கடலை மிட்டாய் வாங்கியது வரையில் பதிவு செய்து வைத்துக்  கொள்ளலாம். இதனால் உங்கள் வங்கிக்கணக்கு காந்தி கணக்கு ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.


Vedantu

இதில் ஏராளமான கல்வி விஷயங்கள் உள்ளன. மாணவர்களுக்கான ஆப் இது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் சந்தா கட்டி இணைந்து பாடங்களை கற்று வருகின்றனர்.


Meesho

வீட்டிலிருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க நினைக்கும் உல்லாசிகளே! உங்களுக்கான ஆப் இது. சரியான கம்பெனியைப் பார்த்து வேலையை ஏற்றால் உங்களுக்கு காசு கிடைக்கும். பிபி மாத்திரைகளின் எண்ணிக்கையும் குறையும்.

Scripts by Drops

பிரிட்டிஷ் காலத்திலிருந்து இருக்கும் ஆங்கிலத்தை இன்னும் கற்க முடியவில்லை என அழும் வாலிப அன்பர்களே. இதுவும் சீன, ஜப்பான் மொழியை கற்கும் ஆப்தான். ஆனால் அதனை ஓவியங்கள், விளையாட்டுகள் மூலம் கற்கச்செய்கிறார்கள்.


Smart

உங்கள் மூளைக்கு சவால் கொடுக்கும் விளையாட்டுகள், கணிதப் புதிர்களை இந்த ஆப் தருகிறது. இதில் ஜெயித்தால் நீங்கள் மீட்டருக்கு மேல ஜீனியஸ் என உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து சபாஷ் சொல்லிக்கொள்ளலாம்.


Appy weather

பிரதீப் ஜான் போல உங்கள் பகுதிக்கான தட்பவெப்பநிலை பற்றிய விளக்கங்கள் உங்கள் மொழியில் தருகிறார்கள். அதற்காக பழங்குடி மொழியில் இவை கிடைக்குமா என்று கேட்க கூடாது. பொதுவான மொழியில் உங்களுக்கு புரியும்படி தருகிறார்கள்.

நன்றி - எகனாமிக் டைம்ஸ்.