30 பிளஸ் ஆட்களுக்கான அரசில் பகடி அதிரடி - முத்தின கத்திரிக்கா
முத்தின கத்திரிக்கா
இயக்கம் வேங்கட் ராகவன்
ஒளிப்பதிவு - பானு முருகன்
இசை - சித்தார்த் விபின்
மூலப்படம் - வெள்ளி மூங்கா
கதை - ஜோஜி தாமஸ்
ஆஹா
படம் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் கேரண்டி. சுந்தர்.சி, சதீஸ், ரவி மரியா, சிங்கம் புலி என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.
மலையாளப்படத்தின் அங்கதத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்கள். அதனால் சிலநேரம் தீவிரமான அரசியல் பகடியோ என்று தோன்றுமளவு படம் செல்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்தான். காமெடி என்பதால் பாடல்களில் இசையமைப்பாளரும் மெனக்கெடவில்லை.
கோவிலூர் நகராட்சியில் நின்று ஜெயிக்கும் லெட்டர்பேடு கட்சித்தலைவர் என்பதுதான் ஒன்லைன். இதில் நாற்பது வயது கடந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது முக்கியமான விஷயம். இதை வைத்தே படம் முழுக்க கலாய்த்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
ஐய்யய்யோ...
சிங்கம்புலி சொல்வது போல ஐந்து தெருக்களை கொண்ட ஊர் என்பதால் பானு முருகனின் கேமரா தடுமாறி இருக்கிறது. எனவே இருக்கும் விஷயங்களை வைத்து பட்ஜெட்டிற்குள் பதவிசமாக பிரமாண்டமாக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல்கள் அனைத்தும் மான்டேஜ்தான். அதுவும் ஊருக்குள்ளேதான். இதனால் படம் ஒரு கட்டத்தில் ஸ்டேஜ் நாடகம் போலத் தோன்றுகிறது. காப்பாற்ற வருவது வேறு யார்? காமெடியன் சதீஸ்தான்.
ஹோம் வீடியோவாக பார்க்கவேண்டிய படம். தியேட்டரில் வந்துவிட்டது. எனவே பெரிதாக வெற்றி பெறவில்லை.ஆனாலும் படம் பார்த்து ரசித்து சிரிக்கலாம். எந்த தடையும் இல்லை.
கோமாளிமேடை டீம்