அமெரிக்காவின் இனவெறியின் கதை!
இன்று உலகம் முழுக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆட்சிக்கு வருபவர்கள் தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் வாயால் நாட்டிற்கு சுவர் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் குறையை மறைக்க மக்களிடையே மத, இன,சாதி போர்களை தூண்டி வருகின்றனர். அமெரிக்கா இதற்கு விதிவிலக்கு கிடையாது. இந்த பயம் அமெரிக்காவில் எப்படி தோன்றியது என வரலாறு ரீதியாக காரணங்களை தேடி நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். பெஞ்சமின் பிராங்களின் காலத்தில் ஜெர்மன், ஆசிய, யூத அகதிகள் அந்நாட்டில் இருந்தனர். அனைவரும் பாடுபட்டுத்தான் அமெரிக்கா வலிமையான நாடாக மாறியது. வென்றால் அமெரிக்கர். தோற்றால் கருப்பினத்தவர் என்று அமெரிக்கா குறிப்பிட்ட பாலிசியை கடைபிடிக்க கூடியது. இந்த பாகுபாடு அரசியல் எப்படி வளர்ந்தது என்பதை இந்த நூல் விளக்குகிறது.
அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த தாமஸ் ஜெஃபர்சன், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லாஃபயேட்டா ஆகியோர் கொண்ட நட்பு, இருவரின் வாழ்க்கை இதன் பின்னணியில் வரலாறு என எழுதப்பட்ட நூல். படித்து இருவரின் நட்பை வியந்து போற்றும்படி எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
நகரில் நடைபெறும் குற்றங்களை ஒருவர் செய்கிறார். அதனைக் கண்டறிய முயற்சிக்கும் மூன்று பெண்களை பேசும் காமிக்ஸ் கதை இது. பரபரவென செல்லும் காமிக்ஸ் கதை நாவலை கீழே வைக்க முடியாமல் இழுக்கிறது. ஒருநாளின் பகல் - இரவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் திகைக்க வைக்கின்றன.