கிஃப்ட் வாங்குவதில் என்ன குழப்பம்?






christmas gift


மிஸ்டர் ரோனி

கிறிஸ்துமஸ், பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போது என்ன பரிசு பிறருக்கு கொடுப்பது என்று குழப்பம் ஏற்படுகிறது என்ன செய்வது?

யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு என்ன உதவும் என்று பார்த்து பரிசு கொடுங்கள். அதற்கு என்று ஜட்டி, பனியன் வாங்கி தரக்கூடாது. அதெல்லாம் அவரே பார்த்து வாங்கிக்கொள்வார். இன்று பெரும்பாலும் அமேசான், ஃபிளிப்கார்ட்டில் விஷ் லிஸ்டை தயாரித்து வைத்துவிடுகின்றனர். பிறந்தநாளின்போது, அதைப்பார்த்து அதில் ஒன்றை வாங்கிக்கொடுங்கள் என்கிறார்கள். கல்யாணத்திற்கு கூட மொய் எழுதுவதை விட வீட்டுக்கு தேவையான பொருட்களாக கொடுக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆபீஸ் சார்பில் கொடுத்துவிடலாம். வேறு எதுவுமே மண்டையில் தோன்றவில்லையா? இரண்டு ரூபாய்க்கு மொய் கவர் வாங்கி அதில் காசை வைத்து கொடுத்துவிடலாம்.

யாருக்கு கொடுக்கிறோமே அவருக்கு நம்முடைய விருப்பம், ஆசை, ஈடுபாடு சார்ந்தும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம். அதேசமயம் அவர்களுக்கு பயன்படும்படு இருக்கவேண்டியது முக்கியம். இதற்கெல்லாமா கவலைப்படுவது? பட்ஜெட் போடுங்கள் அப்புறம் அதற்கேற்ப கிஃப்ட் தேடுங்கள். கிடைத்துவிடும்.



நன்றி - பிபிசி



பிரபலமான இடுகைகள்