கற்பழித்து, முதுகெலும்பில் கத்தியை பாய்ச்சி... - சுற்றுலா கொலைகாரர்




Image result for ivan robert marko milat



அசுரகுலம்


இவான் ராபர்ட் மிலாட்


சுற்றுலா வரும் பெண்களை கடுமையாக தாக்கி வல்லுறவு செய்துவிட்டு அதை மறைப்பது மிலாட்டின் ஸ்டைல். ஆனால் அவரின் கத்தியை அவரால் மறைக்க முடியவில்லை. பெண்களை கண்டதும் முதுகை துளைத்து இறங்கும் கத்தி முதுகெலும்பை நொறுக்கி இருப்பது அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இச்சம்பவத்தில் பெண்கள் பிழைப்பது கடினம். பிழைத்தாலும் வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலிதான்.

கொலை அடையாளங்களை ஆராய்ந்த ராட் மில்டன் என்ற தடய அறிவியலாளர், கொலைகாரர் சீரியல் கொலைகாரர் இல்லை என்று கூறினார். அதேபோல கொலைகாரரின் வயது முப்பது இருக்கலாம் என்றும் கூறினார்.   அதேபோல முதலில் சில சடலங்கள் கிடைத்ததோடு கொலைப்பயணம் தொடரவில்லை. பின்னர், ஓராண்டு கழித்து பிணங்கள் கிடைக்கத் தொடங்கின.

1993ஆம் ஆண்டு இருபிணங்களை போலீசார் பொறுக்கி எடுத்தனர். ஆய்வுகளை சோதித்ததில், இருவரும் 1989ஆம் ஆண்டே காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இருவரின் வயதும் பதினைந்துதான். நான்கு ஆண்டுகள் கழித்து ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அவர்கள் அந்த நேரத்தில் எங்கிருந்தார்கள் என்று போலீஸ் யோசித்தது. எனவே, கொலை நடந்த காடு, அதைச்சுற்றியுள்ள இடங்களில் காணாமல் போனவர்களைப் பற்றி காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது.

இதன் விளைவாக மிலாட் மாட்டிக்கொண்டார். முதலிலேயே இவர் மீது கத்திமுனையில் பெண்களை வல்லுறவு செய்ய மிரட்டி ஆகிய வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டன. இறந்துபோனது பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் என்பதால், அந்நாட்டு அரசுகளின் கோபத்தை ஆஸி. சம்பாதித்தது. விசாரணைக்கான பணத்தையும் வெளிநாட்டு அரசுகள் அளித்தன. அப்புறம் என்ன, மிலாட்டை கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்டு காணாமல் போன சுற்றுலா பயணிகளின் உடைமைகளை கைப்பற்றினர். கூடவே மரணாயுதங்களையும் சீஸ் செய்து நீதியை நிலைநாட்டினர்.

குற்றங்களை ஒப்புக்கொள்ள மிலாட் விரும்பவில்லை. தன் தம்பிகளை மாட்டிவிட நினைத்தார். தந்திரம் வேலை செய்யவில்லை. ஆறு ஆயுள்தண்டனைகளைப் பெற்றார். போலீசார் மூலம் ஏழு கொலைகளை மட்டுமே நிரூபிக்க முடிந்தது.

தொகுப்பு - வின்சென்ட் காபோ

நன்றி - கில்லர்ஸ் நூல்